கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் திட்ட இயக்குனராக மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா இயக்குனர் பணி உயர்வு
கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணி உயர்வு காரணமாக
தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் நொய்டாவுக்கு மாற்றமானார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்பதில் பல சந்தேகங்கள் கேட்டு திருத்தம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான அகழ்வாராய்ச்சியாகும். அதை சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட யாவற்றையும் முழுமையாகப் பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அனுப்பி வைத்தார்கள்.
மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதை வெளியிடாமலேயே காலம் கடத்தி தாமதித்து வைத்திருந்த உண்மை யாவரும் அறிந்ததே !.
கீழடி அகழ்வாராய்ச்சியும் மிகவும் முக்கியமானது தான். தமிழரின் பயன்பாட்டுத் தொன்மையைச் மற்றும் கடந்து போன வாழ்வியல் வரலாற்றைச் சொல்லுகிற அந்த ஆய்வு இன்னும் விரிவாக எடுத்தாளப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் வரலாறு அறியாதவர்கள். சின்னமனூர் செப்பேடு கூறும் சங்கம் வளர்த்த மாமதுரை தமிழ்க் கலாச்சாரங்களின் நகரம் என்பதும் உண்மை தான். தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் அகழ்வாராய்ச்சி நடக்கிறதோ அவை அனைத்தும் மிகவும் முக்கியமானதும் வரலாற்றுப் பூர்வமானதும் மனித நாகரிகங்கள் பற்றிய கூடுதல் அறிவுப் பெருக்கம் காண ஏதுவானது தான்! அவை அனைத்தும் தமிழ் மண்ணுக்கான பெருமை தான் அதை யாரும் மறுக்கவில்லை!
வரலாற்று அறிஞர்கள் சத்தியநாத ஐயர், ரங்கசாமி ஐயங்கார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரி பிள்ளை, சேதுப்பிள்ளை தெ பொ மீனாட்சி சுந்தரனார், கள்ளர் வழி வந்த சதாசிவப் பண்டாரத்தார், போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் ஆய்வு தான் மிக முக்கியமானது அது சீரிய முறையில் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் தொன்மத்தையும் விளக்கும் வகையில் இருக்கிறது எனக் கூறிய பின்னும் இன்று அந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் மந்தமாக அல்லது கவனிப்பாரற்று நடந்து வருகிறது. இது திருநெல்வேலியில் வாழ்பவர்களுக்கு சற்று வேதனை தரக்கூடியது தான் பலரும் இது பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள்! அதற்கு அடுத்ததாக கொடுமணல் சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமீன் பாரம்பரிய அழகன்குளம், கொற்கை, சிவகளை,, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் கீழடியைப் போலவே அகழாய்வுகள் தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் காலத்தில் தொடர்ந்து ஏன் நடைபெறவில்லை அல்லது ஏன் மந்தமாக இருக்கிறது. கொடுமணல் பழைய காலத்தில் கிரேக்கர்கள் கடாரத்தார் சாவகர்கள் எனப் பலரும் வந்து போன வணிகம் நிகழ்ந்த இடம்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு மீண்டும் சிறப்பான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் தற்போது திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது! கீழடி அகழ்வாய்வு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியமானது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்!. சமீபத்தில் மத்திய அரசும் ஆதிச்சநல்லூர் ஆய்விற்கு ரூபாய் 55 கோடிகளை ஒதுக்கியது பலருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த வகையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆதிச்சநல்லூர் ஆய்வைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் இருந்தது என்பது ஒரு முக்கியமான விஷயம் !ஏனெனில் இது உண்மையான வரலாற்று பூர்வமான தகவல்களையும் மிக சிறந்த ஆய்வு உண்மைகளையும் கொண்டுள்ளது!.
இதை நான் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை ஒரு உண்மையான பணியிலிருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரங்களும் இவற்றின் மீது கவனம் கொள்ள வேண்டும் எனும் அக்கறையில் பல வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்!
கீழடி அகழ்வாய்வில் வழக்கறிஞரான கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு மீதுதான் இன்று வரைக்கும் முன்னெடுக்கப்பட்டுப் பொது வெளியில் பேசப்படுகிறது! அதை யாரும் வெளியில் சொல்வதில்லை! பிறகு அதைப் பயன்படுத்திக் கொண்டு மேடைகளில் பல்வேறு அலங்கார பூச்சுகளைப் பூசி வேடிக்கை காட்டிக் கொண்டு அதைத் தாங்களே கண்டுபிடித்ததாக பலவாறு வகையில் சிலரும் கற்பனை கதைகள் எழுதி அதையே ஆய்வுகள் செய்யாமல் வரலாறு எனக் கூறி புத்தகமாக அச்சிட்டு விற்பனை நடத்தி வரலாறு தெரியாத நபர்களிடம் சம்பாதிக்க ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தான் கீழடி ஆய்வின் மொத்தக் குத்தகைதாரர் போலப் பேசப்பட்டு வருகிறார்!
கீழடி -மனலூர், கொந்தகை அகழ்வாய்வில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அதற்கான அனுமதியையும் அதைத் தொடர்ந்து அகழ்வாய்வு சொய்ய வேண்டியதன் முக்கியம் என்பதைத் தீர்ப்பாக சொல்லிய பின்னர் தான் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் வேகம் எடுத்தது!
இவை அணைத்தும் ஒருபுறம் இருக்கட்டும்! மீண்டும் உலகின் கவனத்தைக் கவர்ந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் இந்தச் செய்தியின் நோக்கம். எந்த அறிவும் இல்லாததாக சில பெயர் சொல்லி விரும்பாத பத்திரிகைகள் செயலாற்றுகின்றன. அதோடு பல விஷயங்கள் உள்வாங்காத அங்கீகாரம் பெறாத சமூக ஊடகங்கள் வேறு
என்ன செய்தி எழுதுகிறார்கள் உண்மை அறியாமல் ?!
மற்றொரு விடையம் இதில் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் பணி புரிந்தது 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மட்டுமே.
அதற்குப் பிறகு அவர், அதிலிருந்து பணி மாறுதல் செய்யப்பட்டு விட்டார். அதன் பிறகு கீழடி தொடர்பாக எந்தப் பொறுப்பிலும் அவர் இல்லை.
கோவில் கணக்கெடுப்புப் பணி அதற்குப் பிறகு தேசிய நினைவுச் சின்னங்கள் பிரிவு இயக்குநராக அமர்த்தப்பட்டார் அவரிடம் பழமையான பொருட்கள் பிரிவும் கூடுதலாக அளிக்கப்பட்டது.
இப்போது புதிய மற்றொருவரும் இயக்குநராக ஆகியுள்ள நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் பார்த்து வந்த அந்தக் கூடுதல் பழமையான பொருட்கள் துறையை புதிய இயக்குநருக்கு அளித்துள்ளார்கள்.
டெல்லி அலுவலகத்திலிருந்து நொய்டா என்பது 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
அமர்நாத் ராமகிருஷ்ணா ஊடக வெளிச்சம் பழகிவிட்டார்.
இதற்கும் அவரது அறிக்கைக் குளறுபடிக்கும் தொடர்பு படுத்தி மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்டேசனும் ஒரு விளம்பரப் பிரியர் இதை வைத்துத் தான் மோகனுக்குப் பின்னர் கூட்டணி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் .
இவர்களின் இந்த விளம்பர வெறிக்குப் பத்திரிகை ஊடகங்கள் பலிகடா ஆகலாமா என்பது தான் எழுவினா ?!
ஒருவேளை, பத்திரிகை ஊடகத்தில் பணி புரிபவர்கள சிலர் வரலாறு அறிந்து கொள்ள வேண்டும் என அவர்கள் பணி செய்துவரும் நிறுவனம் சொல்லி விட்டதோ என்னவொ தெரியவில்லை ?!
அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாய்வு இயக்குநராகவா இருந்தார் ? இதையெல்லாம் பத்திரிகையாளர் தர்மம் கேட்பதில்லையா என்ன ?ASI திட்ட இயக்குநருக்கும் துறை இயக்குநருக்கும் வேறுபாடு தெரியாத சில செய்தி ஊடகங்கள்
அமர்நாத் ராமகிருஷ்ணா ASI தேசிய நினைவுச் சின்னம் துறை இயக்குநராகப் பதவி உயர்வு 2024 ம் ஆண்டே பெற்றார்
கீழடி அகழ்வாய்வு மேற்கொண்ட 2014-16 ல் அமர்நாத் ASI திட்ட இயக்குநர் மட்டுமே
அதன் பிறகு ASI கோவில் ஆய்வுத் திட்ட இயக்குநர் மட்டுமே
17 ஜூன் 2025 அன்று அவரிடமிருந்த இரு துறைகளில் ஒரு துறை மட்டுமே புதிய இயக்குநருக்கு அளிக்கப்பட்டது
ஒரு வருடம் கழித்து இப்போது அது குறித்து பேசுவது ஏன் என்பது தான் நம் வினா ?
கருத்துகள்