வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை செயலாளர் பெ.அமுதா இ ஆ ப வெளியிட்ட அரசாணையில் உள்ள தகவல்கள்: வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது
தொடர்பாக, வருவாய்த் துறை செயலாளரின் கருத்துருவை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர் ஆன தலையாரி பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்எஸ்எல்சியில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
இரண்டு சக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்தத் தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் அல்லது, தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும். நேர்காணல், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும். இதற்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது.
கிராம உதவியாளர் என்ற தலையாரி நியமனம் தொடர்பான அறிவிப்புகள் முறையாக உரிம விதிகள்படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறை உரிய விதிகள்படி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்த பின், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளை மீறினால், அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அரசாணை மூலம் தெரிவித்துள்ளார். வருவாய் துறையில் "தலையாரி" என்று அல்லது கிராம உதவியாளர் கிராம நிர்வாக அலுவலரின் கீழ் பணிபுரிவார். பணிகளாக
கிராமக் கணக்குகள் பராமரிப்பு
நிலவரி, பயிர் விவரங்கள், பிறப்பு இறப்புப் பதிவேடுகள் போன்றவற்றை பராமரித்தல்.
வரி வசூலித்தல்:
நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி போன்றவற்றை வசூலித்தல்.
பணிகளை மேற்கொள்ளுதல்:
சர்வே கற்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, காணாமல் போன கற்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல், பிற பணிகளைச் செய்தல்.
கிராம நிர்வாக அலுவலரின் கீழ் நியமிக்கப்பட்டு, அவர் கூறும் பணிகளைச் செய்தல்.
கிராம அளவில் நிர்வாக பணிகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கிறார்கள்.
கிராம மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, அவர்களது தேவைகளை அறிந்து, அரசின் திட்டங்களை செயல்படுத்த உதவுகிறார்கள்.
வருவாய் துறையின் செயல்பாடுகளை கிராம அளவில் கொண்டு செல்ல உதவுகிறார்கள்.
எனவே, தலையாரி (கிராம உதவியாளர்) என்பது வருவாய் துறையின் ஒரு அங்கம்.
கருத்துகள்