இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டுக்குள்
எடுக்க மத்திய அரசு அறிவித்த நிலையில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்க்கப்படும். இருப்பினும், அறிவிப்பில் ஜாதிக் கணக்கெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சில தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் இருக்கும் என்று ஏற்கனவே ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி, ஜூன் மாதம் 4 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2025 தேதியிட்ட செய்திக்குறிப்புகளில் அது குறிப்பிடப்பட்டுள்ளது
செய்திக்குறிப்புகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகளை மத்திய உள்துறை செயலாளர், ஆர்ஜி & சிசிஐ மற்றும் பிற மூத்த உயர் அலுவலர்களுடன் புதுதில்லியில் இன்று ஆய்வு செய்தார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஜூன் மாதம் 16 ஆம் தேதி, 2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் அதாவது வீட்டுப் பட்டியல் செயல்பாடு (HLO), ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் சேகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE), ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் செய்யப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு 8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
தொடர்ந்து நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்குக் கிடைக்கும்.
சேகரிப்பு, பரிமாற்றம் மற்றும் சேமிப்பின் போது தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகவும் கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் வைக்கப்படும்.
கருத்துகள்