அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானத்தில் 44 (5-குழந்தைகள் உட்பட) பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 50 பேர் இருந்துள்ளனர்
எனவும், சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் டிண்டா நகரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது என்ற தகவலும் வெளியான நிலையில், விமானத்துடனான தொடர்பை முற்றிலுமாக இழந்ததாக ரஷ்ய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் விமானத்தில் இருந்த 50 பேரின் நிலை எஎன்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
தரையிறங்க சில மைல் தூரம் மட்டுமே இருந்த நிலையில் விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அந்த தகவலை வந்தது. ரஷியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேரும் உயிரிழந்தனர்:
பிளாகோ வெஷ் சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி பகல் ஒரு மணிக்கு அங்காரா ஏர்லைன்ஸின் ஏஎன்-24 விமானம் புறப்பட்டது.
இந்த நிலையில், சீனாவின் எல்லை அருகேவுள்ள ஆமூர் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் தொடர்பை விமானக் கட்டுப்பாட்டு அறை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக, விமானத்தை த்தேடும் பணியை ரஷிய பேரிடர் மீட்புப் பணி அமைச்சகம் தொடங்கியது. விமானம் ரேடாரில் இருந்து மறைந்த பகுதியில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில், தைண்டாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு சரிவானப் பகுதியில், விமானம் சிதறுண்டு கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடர்த்தியான காட்டுப் பகுதியில் விமான விபத்து நடந்துள்ள நிலையில், அப்பகுதி கரும்புகையுடன் காட்சி அளிக்கிறது.
இந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் அளித்திருப்பதாக ரஷிய பேரிடர் அமைச்சக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் குழுவினரை ரஷிய அரசு அனுப்பிவைத்துள்ளது.
கருத்துகள்