ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநரின்
எண்ணித்துணிக 19-வது பகுதியின் போது, தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி மருத்துவம் வல்லுநர்கள் கலந்துகொண்டனர். மனிதகுலத்திற்கு அவர்களின் சிறந்த சேவைக்காக ஐம்பது மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.ஜூலை மாதம் 13-ஆம் தேதி நடந்த மருத்துவர்கள் தினத்தில் ராஜ் பவன் ஏற்பாடு செய்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
சிறப்பகச் செயல்படும் 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசும் வழங்கினார்.
அந்தக் கேடயத்தில் அச்சிடப்பட்டிருந்தது திருக்குறளின் வரிசை எண் 944 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது
திருக்குறள் புத்தகத்தில் கவர்னர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறளை தேடிய போது, 944 -என்ற எண் வரிசையில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரியவந்தது. அந்த திருக்குறள் ஒரு போலியான திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக கவர்னர் மாளிகை நிர்வாகம் 50 மருத்துவர்களுக்கு வழங்கிய
விருதுகள் அனைத்தையும் திரும்ப பெறத் திட்டமிட்டிருப்பதாகவும் திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிட்ட திருக்குறள்
"செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. (திருக்குறள் 944)
ஆனால் நம்பர் வரிசை படி
"அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து" என்பதே சரி
இந்த நிலையில், இது மிகப்பெரிய தவறென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிய எக்ஸ் தள பதிவில்,
13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.இந்தநிலையில்
இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என பதிவிட்டுள்ளார். இது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார் ஆனால் உண்மையில் திருக்குறள் எண் மட்டுமே மாறியது இங்கு கவணிக்கத் தக்கது ஏசு கிறிஸ்து பிறப்புக்கு 31 ஆண்டுக்கு முன்னர் பிறந்த திருவள்ளுவர் ஆண்டை அரசு 1935 பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அவர் ஹிந்து மதத்தின் எட்டு பிரிவுகளில் சைவ நெறி சார்ந்தவர் ஆவார்
கருத்துகள்