அவமதிப்பு வழக்கு- 5 ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர்கள் ஆகஸ்டு மாதம் 4- ஆம் தேதி நேரில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.
உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு- 5 ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர்கள் ஆகஸ்டு மாதம் 4- ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு.
தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு 1991-ஆம் ஆண்டு பலரை வேலையில் அமர்த்திய பின்னர், அவர்களை பணியிலிருந்து விடுவித்து நீக்கம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும், டில்லியில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததன் படி சேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை 2004-ஆம் ஆண்டு முதல் வரையறை செய்து 2010-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது
இதனால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில் அவர்களுக்கு பணி வழங்க உச்சநீதிமன்றம் 1999- ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டதன்படி, அவர்களது பணி 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8- ஆம் தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, அவர்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது'' எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப் படி, மனுதாரர்களை 1996-ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெயர்களைச் சேர்க்க வேண்டுமென 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டதை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. அதையடுத்து, மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை ஆணையர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இது நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட 6 உயர் அலுவலர்களையும் ஆகஸ்டு மாதம் 4- ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
கருத்துகள்