கோயமுத்தூரில் ரூபாம்.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் கைது.
கோயம்புத்தூரில் ரூபாய்.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் இந்திராவை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர். ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையராக இந்திரா, வயது 54, பணிபுரிந்து வருகிறார். சூலூர் பாப்பம்பட்டி பகுதியிலுள்ள தனியார் ஆலயமான. சூலூர் பாப்பம்பட்டி பிரிவிலுள்ள புடவைக்காரி ஸ்ரீ மகாலட்சுமி அம்மன், கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில்கள் பழமையானவை.
அங்கு உண்டியல் மூலம் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்தக் கோவிலில் முறையான நிர்வாகம் செய்யவில்லை. என அந்தக்கோவிலை ஹிந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளின் படி எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம், ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்,
'கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் இந்திராவைச் சந்தித்தார். அப்போது, 'கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூபாய்.3 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும்'
என இந்திரா கேட்டுள்ளார்.அவ்வளவு பணம் தன்னால் தர இயலாது' எனக் கூறிய நிலையில், இறுதியாக இரண்டு லட்சம் ரூபாய் தருமாறு கேட்டார். பல முறை பேரம் பேசி, கடைசியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சுரேஷ்குமார். கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு, புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்ர் அறிவுறுத்தல்படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய, ரூபாய்.1.5 லட்சத்தை, உதவி ஆணையர் இந்திராவிடம் சுரேஷ் வழங்கிய போது மறைந்திருந்த, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
லஞ்சம் வாங்கிய, இந்திராவை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இந்திரா விசாரணை நடத்திய நிலையில் தவறாகப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.
இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் பொறி வைப்பு நடவடிக்கை CCTV ஆதாரங்களுடன் இந்திராவைக் கைது செய்தது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை இருப்பினும், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களைத் தாண்டி, துறையில் முறையான ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுகின்றன.
கையுடன் பிடிபட்டிருப்பதால் இந்த ஊழல் வெளிவந்துள்ளது. பிடிபடாமல் இருக்கும் HR&CE சிவகங்கை இணை ஆணையர் பாரதி போன்ற மிகப் பெரிய ஊழல் அலுவலர்கள் எண்ணிக்கை அதிகம். இந்த சம்பவத்தில் HR&CE நிர்வாகத்திற்குள் கொண்டு வர இலஞ்சம் கேட்டிருப்பது போல, திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் பகுதியில் ஒரு கோவிலை HR&CE நிர்வாகத்தில் எடுக்காமலிருக்க ஒரு துணை மற்றும் இணை ஆணையர் தகுதியிலுள்ள அலுவலர் இலஞ்சம் கேட்பதாக நமக்குத் தெரியவந்துள்ளது. முறையாக நோட்டீஸ் வழங்காமல், நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2018 ஆம் ஆண்டு புகாருக்கு 2021 ஆம் ஆண்டில் ஆணை வெளியிட்டு 2025 ஆம் ஆண்டில் திடீரென்று தனது நிர்வாகத்திற்குள் HR&CE கொண்டு வந்துள்ளதாகத் தகவல். 2018- 2025 க்கு இடைப்பட்டக் காலத்தில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் வேறு நடைபெற்றுள்ளது. தற்போது அறங்காவலர்கள் இல்லாமலேயே , அரசின் முறையான பணியமர்த்தல் இல்லாமலேயே ஒரு சிலரால் கோவில் நிர்வாகம் செய்யப்படும் நிலையும் உள்ளது. இது குறித்து துறைக்கு அனுப்பியப் புகார்களுக்கு பதில் ஏதும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், HR&CE துறையில் ஒரு ஒழுங்கு முறை சட்டம் சார்ந்த நிர்வாகச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது. கோவில்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குத் வெளிப்படையான கொள்கைகள், கடுமையான கண்காணிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் அவசியம். இந்திராவின் கைது, ஊழல் ஒழிப்பில் ஒரு படியாக இருந்தாலும், இது துறையில் உள்ள ஆழமான பிரச்சினைகளைத் தீர்க்க முழுமையான அணுகுமுறை தேவை என்பதை உணர்த்துகிறது.
கருத்துகள்