ஸ்ரீ இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி
"ஸ்வஸ்திஶ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும். முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும் இரட்ட பாடி ஏழரை இலக்கமும். முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும். திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன் எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும். தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோஇராச கேசரி வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு". மும்முடிச்சோழச் சக்கரவர்த்தி “உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத் தேவர்” சோழ நாட்டு அரியணை ஏறி பேரரசனாக முடி சூடிய ஆடிப் புனர்பூசத் திருநாள் ஆகும், அதேபோல் மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித் திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
ஜூலை மாதம் 23-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொண்டாடப்பட்டதையடுத்து மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சார பயன்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்படுகிறது. அதன் நிறைவு நாள் விழா நாளை நடப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதனால் அரியலூர் மாவட்டம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வடபுலத்தில் வெற்றி கண்ட பின்னர் உருவான ஜெயங்கொண்ட சோழபுரம் அதன் பின்னர் உருவான கங்கை கொண்ட சோழபுரம் தற்போது அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழர்களின் பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான முதலாம் இராசேந்திர சோழனால் உருவாகி 250 ஆண்டுகள் பிற்காலச் சோழப் பேரரசின் தலைநகர். இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்று ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இங்கு கங்கைகொண்ட சோழீசுவரர் சிவன் கோவிலாகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரை வடிவமைப்பு செய்த முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திர சோழன் அமைத்து கோவிலையும் கட்டி இங்கு ஐராவதேஸ்வரர் மற்றும் பெருவுடையார் கோவில் மூன்றும் சேர்த்து அழியாத சோழர் காலத்தில் பெருங்கோவில்களாகின்றன.
இந்த ஸ்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். 1987- ஆம் ஆண்டில் , தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ஆம் ஆண்டில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோவிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.பொ.ஊ. 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோவில்களும் அதிகளவிலான ஒற்றுமையமைவுகளைக் கொண்டுள்ளன. கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் , முதலாம் ராஜேந்திர சோழனால் (கி.பி. 1012-1044) சிவனுக்காகக் கட்டப்பட்டது . இந்தக் கோயிலில் விதிவிலக்கான தரமான சிற்பங்கள் உள்ளன. போகசக்தி மற்றும் சுப்பிரமணியரின் வெண்கலக் கற்கள் சோழர் கால உலோகச் சின்னங்களின் தலைசிறந்த படைப்புகளாகும். எட்டு தெய்வங்களைக் கொண்ட தாமரை பலிபீடமான சௌரபீடம் (சூரிய பலிபீடம்) மங்களகரமானதாகும்.
தஞ்சாவூரில் ஐராவதேஸ்வரர் கோவில் சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜனால் (கி.பி. 1143-1173) ஆம் ஆண்டில் கட்டப்பட்டது : இது தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுடன் ஒப்பிடும் போது அளவில் மிகவும் சிறியது . அதன் மிகவும் அலங்காரமான வடிவமைப்பில் இது அவற்றிலிருந்து வேறுபடுகிறது . இந்தக் கோவில் சுற்றுப்பாதை மற்றும் அச்சு மண்டபங்கள் இல்லாத ஒரு கருவறையைக் கொண்டுள்ளது. ராஜகம்பீரன் திருமண்டபம் எனக் கல்வெட்டுகளில் அழைக்கப்படும் முன் மண்டபம், சக்கரங்களைக் கொண்ட தேர் போல கருத்தாக்கப்பட்டது தனித்துவமானது. இந்த மண்டபத்தின் தூண்கள் மிகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அலகுகளின் உயரமும் கட்டிடக்கலையில் ஆதிக்கம் செலுத்தும் சிற்பங்களுடன் நேர்த்தியானது. இந்த கோவிலில் இருந்து பல சிற்பங்கள் சோழர் கலையின் தலைசிறந்த படைப்புகளாகும். 63 நாயன்மார்களுக்கு நடந்த நிகழ்வுகளைப் புகழ்ந்துரைக்கும் பெயரிடப்பட்ட மினியேச்சர் ஃபிரைஸ்கள் குறிப்பிடத்தக்கவை மற்றும் இந்த பிராந்தியத்தில் சைவ மதத்தின் ஆழமான வேர்களை பிரதிபலிக்கின்றன. பிரதானக் கோவிலை விட சற்று தாமதமாக தேவிக்கு ஒரு தனி கோயில் கட்டப்பட்டது, தென்னிந்தியக் கட்டிடக்கலையில் அமைந்துள்ளது கோவில் அதன் வளாகத்தின் ஒரு முக்கிய அங்கமாக அம்மன் சன்னதி தோன்றியதைக் குறிக்கிறது . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இராஜேந்திர சோழன் திருவாதிரை விழாவை நடத்தியதைத்தொடர்ந்து மத்திய அரசு தனியாக ஐந்து நாள்கள் விழா எடுக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாளை காலை சுமார் 11.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார்.
கோவிலில் வழிபாடு செய்த பிறகு கோவிலைப் பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கோவில் வளாகததில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் நரேந்திர மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மன்னர் முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி விழாவின் முத்தாய்ப்பாக இருக்கும்.
மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
23- ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொண்டாடப்பட்டதையடுத்து மத்திய அரசின் தொல்லியல் துறை, கலாச்சார பயன்பாட்டு த்துறை சார்பில் கொண்டாடப்படுகிறது. அதன் நிறைவு நாள் விழா நாளை நடப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதனால் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வருகையால் கங்கை கொண்ட சோழபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவு நேரத்தில் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தூத்துக்குடியில் இருந்து இன்று இரவு திருச்சிராப்பள்ளி வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்ச்சத்திர விடுதி ஒன்றில் தங்குகிறார்.
பின்னர் நாளை காலை சுமார் 11 மணியளவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் கங்கைகொண்ட சோழபுரம் புறப்படுகிறார். இதற்காக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் வழிபாடு செய்த பிறகு கோவிலைப் பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கோவில் வளாகத்தில்
மின்னொளியில் ஜொலிக்கும் நிலையில்
இதற்காக விழா பந்தல் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதில் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் 1,200 பேர், 200 வி.ஐ.பி,கண்கள் 31 துறவிகள் மற்றும் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி மூலம் நடக்கும் நிகழ்வு ஹைலைட்டாக அமையும்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழனின் பெயரைச் சூட்ட வேண்டும், நெதர்லாந்தில் உள்ள ஆனைமங்கலம் செப்பும் பட்டயத்தைம் மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியிடம் வைக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழன் பெயரை அறிவிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல். இரண்டு மணி நேரம் வரை கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருந்து கலந்து கொள்கிறார். மாநிலத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி திருச்சிராப்பள்ளியில் உச்சகட்ட பாதுகாப்பு
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகர் மற்றும் விமானநிலையப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான உயர் அலுவலர்கள், திருச்சிராப்பள்ளி விமானநிலையம், பிரதமர் தங்கும் தனியார் நட்சத்திர விடுதி ஆகியவற்றை தங்களச கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள், பயணிகள் உடைமைகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
விமான நிலையத்தின் கார் பார்க்கிங், பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக் குழுவினர் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. உயர் அலுவலர்கள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்தனர்
விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்வது தடுத்து நிறுத்தப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வந்து செல்லும் திருச்சிராப்பள்ளி -புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, குட்ஷெட் மேம்பாலம் 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வருகைக்காக ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்திறங்கின. பிரதமர் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்த ஒத்திகை நடந்தது. திருச்சிராப்பள்ளி -புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மற்றும் கடை வீதிகளில் இரும்புத தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் பகுதி முகப்பு சாமியானா பந்தல் மூலம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தூய்மைப்பணிகள் மற்றும் சாலைகளில் இருந்த குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் விமான நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகள் காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். விமானநிலையம் மற்றும் பகுதி முழுவதிலும் 2 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கவனிக்கத் தக்கது யாதெனில் சோழ மன்னர்கள் ஆட்சியில் சைவ நெறி மற்றும் ஆன்மீக நிலை சிவ வழிபாடு சிறப்பாக இருந்தது அப்போது கடவுள் மறுப்பாளர்கள் அறவே இல்லை.அப்படித் தெரிந்தால் அவர்கள் கழுவில் ஏற்றிமிருபார் மன்னர்.பலமான தண்டனைக் காலம் அது .இரண்டாம் இராஜராஜன் போல பாண்டியர்ககளிடம் பொன்னமராவதி யுத்தத்தில் சோழர்கள் தோற்ற வரலாறும் உண்டு ஆனால் அதற்கு முன்னர் உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , செப்பேடுகள் , காசுகள் , எடுத்த திருக்கோயில்கள் , நிறுவிய புதிய தலைநகரம் , கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இப்போதும் வரலாறு பேசும் இந்தக் கோவிலாகும்.
கருத்துகள்