இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையை நவீனமயமாக்குதல் மற்றும் தரமான உற்பத்தி பங்குதாரர் பட்டறை
கால்நடை பராமரிப்பு என்பது பணம் ஈட்டும் துறையாகும், இது நாட்டின் மொத்த விவசாய மொத்த மதிப்பு கூட்டலுக்கு (GVA) 30.7% பங்களிக்கிறது.
நாட்டில் நவீன, மீள்தன்மை கொண்ட கால்நடை பராமரிப்புத் துறைக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போக DAHD-ன் உறுதிப்பாட்டை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் அல்கா உபாத்யாயா மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மீன்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD), இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையை தரமான உற்பத்திக்காக நவீனமயமாக்குவது குறித்த ஒரு பட்டறையை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று ஏற்பாடு செய்தது. “இந்தியாவின் விவசாயம், தோட்டக்கலை, பால்வளம், மீன்வளம் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றை தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் மாற்றியமைத்தல்” என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இது நடைபெற்றது . இது தலைமைச் செயலாளர்களின் ஆறு துறை உச்சிமாநாடுகளின் 4 வது மாநாட்டிற்கு ஏற்ப நடைபெற்றது
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி. அல்கா உபாத்யாயா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் மத்திய அரசு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், பால் கூட்டமைப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. கால்நடை வளர்ப்புத் துறையை நவீனமயமாக்குதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் தரம் சார்ந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து ஆலோசிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளர் திருமதி. அல்கா உபாத்யாயா, சிறப்புரையாற்றுகையில், கால்நடை பராமரிப்பு என்பது பணம் ஈட்டும் துறை என்றும், நாட்டின் மொத்த விவசாய மொத்த மதிப்பு கூட்டலுக்கு (GVA) 30.7% பங்களிப்பதாகவும் எடுத்துரைத்தார். தேசிய மற்றும் மாநில அளவில் புதுமை, சிறந்த தரம், வலுவான ஒத்துழைப்பு ஆகியவற்றின் தேவையை அவர் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்தத் துறையில் அதிக விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குவது அவசியம் என்றும் கூறினார். களத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் கவனத்தை ஈர்த்தார். நவீன, மீள்தன்மை கொண்ட கால்நடை பராமரிப்புத் துறைக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போக DAHD-ன் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார்.
இந்திய அரசின் DAHD-யின் கூடுதல் செயலாளர் (C&DD) திருமதி வர்ஷா ஜோஷி, பங்கேற்பாளர்களை வரவேற்று, துறையின் கருப்பொருளின் கருத்தை முன்வைத்தார். தரமான உற்பத்தியை உறுதி செய்வதில் உள்ள சவாலை அவர் எடுத்துரைத்தார், மேலும் கால்நடைத் துறையில் நல்ல தரமான தீவனத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார். பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியில் DAHD-யின் முக்கிய சாதனைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார், இது இந்தியாவின் கால்நடை வளர்ப்பு வலிமையை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக இனப்பெருக்கம், நோய் கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில், துறையை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தப் பயிலரங்கில் வட மாநிலங்கள் (ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம்), மேற்கு மாநிலங்கள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான்), தென் மாநிலங்கள் (ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி), கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், பீகார்) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நான்கு பிராந்திய அமர்வுகள் இடம்பெற்றன.
ஒவ்வொரு அமர்விலும், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிலையான கால்நடை நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பிராந்தியம் சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தீவிரமாக விவாதித்தது. இறுதி அமர்வு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, கூட்டு நடவடிக்கைக்கான ஒரு வரைபடத்தை கோடிட்டுக் காட்டியது, அதில் மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டாக முன்னோக்கிச் செல்லும் வழியில் பங்களித்தனர், அதாவது செயல்படுத்துவதற்கான உத்தி.
கருத்துகள்