தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக
பொதுமக்களிடையே மிகவும் அச்சத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்தல், வெறிநாய் கடித் தொற்று, சாலை விபத்துகள் மற்றும் பொது பாதுகாப்புக் கவலைகள் போன்ற சம்பவங்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் இந்த நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாய் கடியால் 39,259 நபர்கள்
பாதிக்கப்பட்டுள்ளநிலையில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரேபிஸ் எனும் வெறிநாய் கடி தொடர்பான இரண்டு இறப்புகள் நடந்ததுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன . 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் தெரு நாய்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் 2017 ஆம் ஆண்டில் 16 நபர்கள் உயிரிழந்தனர் 2014 ஆம் ஆண்டில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் நான்கு வயது உடைய ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதுநாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதனால், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் முதல் வாகனத்தில் செல்லும் நபர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பதால் தமிழ்நாடு அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளதில் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த விபர ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும்
கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டுமென்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெருவில் திரியும் நாய்களால்
கடிபட்டு பெரியளவில் மனிதர்கள் பாதிப்பு. வெறி நாய்க்கடியால், உயிர் பறிக்கும் "ரேபீஸ்" பரவும் அபாயம். இந்த நிலையில்
தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு.
ரேபீஸ் பரவல் ஒருபக்கம் இருக்க, இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில்
வீடு திரும்புவோரை விரட்டிச் சென்று சாலை விபத்துகளை உண்டாக்குவது.
மூத்த குடிமக்கள் தனியாக நடந்து போனால் குதறியெடுப்பது - என
தெரு நாய்களின் அட்டகாசம் அதிகம்.
இப்போது அந்தப் பட்டியலில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளும் சேர்ந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில்
வெறிநாய் கடிக்கு ஆளாகி
ஒன்பது பேர் மருத்துவமனையில்,
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் இருவர், 'நாய்க்கடி' காரணமாக சிகிச்சைக்கு அனுமதி.
சென்னை வேளச்சேரி சிறுவன். சென்னை பெசன்ட்நகர் சிறுமி. இருவருக்கும் ஒன்பது வயது. இதுவே இன்றைய அப்டேட்.
நாய்க்கடி சம்பவம் (1)
தென்காசி அருகே வடகரை பகுதியில் நாய்கள் விரட்டி விரட்டிக் கடித்ததில்
சிறுமி உள்பட ஐவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
நாய்க்கடி சம்பவம் (2)
ஓசூர் -தளி அருகேயுள்ள தின்னூர்
பகுதியில் நாய்க்கடிக்கு இளைஞர் பலி.
நாய்க்கடியை சாதாரணமாக நினைத்து முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் போனதால் தான் இறப்பு நிகழ்ந்து விட்டது என மருத்துவமனை தரப்பில் விளக்கம்.சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த அம்மாவுக்கும் கடி. மகளுக்கும் கடி. கண்ணில்பட்ட அடுத்த மூவருக்கும்
அதேபோல் கடி. தீவிர சிகிச்சைக்காக ஐந்துபேரும் அரசு வாணியம்பாடி மருத்துவமனையில், சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
வாணியம்பாடியில் நாய்க்கடி அட்டகாசம் திருப்பூர் உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களில் கடி. இன்று சென்னை ராமாபுரம். வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து.
ரத்தகாயத்துடன் அலறிய பையனை அங்கிருந்தவங்க தூக்கிப் போய் மருத்துவமனையில சேர்த்திருக்காங்க.
இந்த நிலையில் நோய்கண்ட நாய்களின் கருணைக் கொலைக்கு அரசாணை வெளியீடு மனிதர்களைக் கொல்லும் கொடிய விலங்கு எனில் இது சரிதான் காவல் காக்கும் பிராணிகள் மீதான கரிசனம் தேவை முடிந்தால் அயல்நாட்டு நாய்கள் வளர்ப்பதை அரசு தடை செய்யலாம். ஆனால் அயல்நாட்டு நாய்கள் வளர்ச்சி கருதி உள்நாட்டு நாட்டு நாய்களை ஒழிக்க கார்பரேட் கள் முயற்சி இதுவோ? என்ற சந்தேகம் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
கருத்துகள்