குழந்தைகளைப் படுகொலை செயத குற்றவாளிகள் குன்றத்தூர் அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் பழக்கம் .
பெற்ற குழந்தைகளைக் கொன்ற தா(பே)ய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி தான். 201 பக்கம் உள்ள தீர்ப்பு பலரும் வரவேற்பு.
சென்னை புறநகர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றியர். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் (வயது 6) என்ற மகனும் கார்னிகா (வயது 4) என்ற மகளும் இருந்தனர்.
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமானதாக நினைத்த அபிராமிக்கு அந்தப்பகுதியில் பிரியாணிக் கடையில் பணியாற்றிய சர்வர் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இவர்களது விவகாரம் அபிராமி கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்த நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்து அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்குத் தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய முடிவு செய்தார்.
2018-ஆம் ஆண்டு அவரது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அதில் விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக அபிராமி கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபிராமியைத் தேடினர் அப்போது கள்ளக்காதலன் சர்வர் சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிடித்துக் கைது செய்து விசாரணை நடத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளைக் கொன்ற தா(பே)ய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையான கள்ளக்காதலன் சர்வர் சுந்தரமும் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.நமது மரபுவழி திருமணச் சடங்குகளும் உணவு உடை கலாச்சாரம் தற்போது மாற்றம் கண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை முறையும் மாற்றத்தை கண்டுள்ளது. அப்படியிருக்க, இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை தாண்டிய உறவு அதிகமாகியிருப்பதை கவனித்திருப்பீர்கள். செய்திகளில், உங்களின் பார்வைக்கு இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளின் திருமணத்தை தாண்டிய உறவின் எண்ணிக்கையும் பெரியளவில் வேறுபடுகிறது. இது சமீபத்தில் வெளியான தரவுகள் மூலம் தெரியவந்தது.
Ashley Madison என திருமண டேட்டிங் செயலி ஜூன் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன் தரவுகளின்படி, சிறு சிறு நகரங்களில் இருந்தும் கூட புதிய பயனர்களின் வருகை அதிகரித்திருப்பதால் இந்தியாவில் தங்கள் செயலி மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
அதில் முதலிடத்தில் காஞ்சிபுரம்
அந்த வகையில், Ashley Madison's வெளியிட்ட சமீபத்திய டேட்டாவின் படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தான் அதிகமான பயனர்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர். அதாவது, டெல்லி மற்றும் மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதே பட்டியலில் காஞ்சிபுரம் 17 ஆவது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் முதலிடத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆனால், ஏன் இந்தளவிற்கு அந்த பகுதிகளில் அதிக பயனர்கள் பதிவு செய்திருக்கின்றனர் என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்தவில்லை. காஞ்சிபுரத்தில் இந்த செயலியின் வளர்ச்சி காணும்போது இரண்டாம் தர, 3ம் தர நகரங்களிலும் இந்த செயலி, முதல் தர நகரங்களை விட வேகமாக வளர்ச்சி காண்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.Extramarital Affairs In India: டெல்லி பகுதிகளும் ரொம்ப மோசம்
Ashley Madison செயலியில் திருமணத்தை தாண்டிய உறவில் அதிகம் செயல்படும் முதல் 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதில் டெல்லி - தேசிய தலைநகர் பகுதி ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. 20 நகரங்களில் 6 நகரங்கள் டெல்லியை சுற்றியது. மத்திய டெல்லி இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கிறது. தென்மேற்கு டெல்லி, கிழக்கு, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன. மேலும் டெல்லி அருகே உள்ள கொரேகான், காசியாபாத், நொய்டாவின் கௌதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளிலும் இந்த செயலிக்கு அதிக பயனர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
, இங்கு அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..இருவருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்க வேண்டும்..?! குற்றவாளி
அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது இது
தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அபிராமி, 2 வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி உணவு இடைவேளைக்குப் பின் தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்
ஆனால் அடுத்த 10 வது நிமிடமே நீதிபதி செம்மல், நீதிமன்றத்துக்குத் திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?
அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசித்தார்
இந்த வழக்கில் குற்றவாளிகள் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்
இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது
ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது
நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம்
முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்
நான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன்; எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள இருப்பதால் கருணை காட்டவேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை விடுத்து
நானும் எனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் எனது தண்டனையை குறைக்க வேண்டுமென அபிராமியும் கோரிக்கை விடுத்த நிலையில்,
இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது " என நீதிபதி செம்மல் நல்ல தீர்ப்பை வழங்கியது சிறப்பு இந்த 201 பக்கங்கள் கொண்ட முழுமையான தீர்ப்பை நாம் படித்த போதும் வாசகர்கள் அறிய சில பக்கங்கள் மட்டுமே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்