கடலூர் பள்ளி வாகனம் மீது ரயில்வே கேட்டை அடைக்காத
நிலையில் ரயில் மோதியதால் 3 மாணவர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தில் அதிவேகமாக கடக்க முயன்ற போது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் பள்ளி வாகனத்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றது. பள்ளி வாகனத்தில் 4 மாணவர்கள், ஒரு உதவியாளர் மற்றும் வேன் ஒட்டுநர் பயணம் செய்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கவனிக்காமல் கடக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பள்ளி வாகனத்தில் 4 மாணவர்கள், ஒரு உதவியாளர் மற்றும் வேன் ஒட்டுநர் பயணம் செய்துள்ளனர்.
இதில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியதாகவும், இதில் பயணித்த மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை, ஆனால் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பணியில் இருந்த கேட்கீப்பர் கேட் மூடாமல் இருந்த நிலையில் தான் விபத்து நடந்தது அவரை பார்த்த பொதுமக்கள் தாக்கினர். வேன் ஓட்டுநர் தான் மூடிய ரயில்வே கேட்டை திறக்கச்சொன்னதாக ரயில்வே நிர்வாகம் தகவல். ஆனால்இந்த விபத்திற்கு முழுமையான காரணம் கவனக் குறைவு காரணமாக பள்ளி வாகனம் ஓட்டிய ஓட்டுனர் மற்றும் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணமும் தான் . பயண சீட்டு வாங்காமல் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான வட இந்திய நபர்கள் ரயில்வே சரகங்கள் நஷ்டத்தில் இருக்கும் போது இந்திய ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே மட்டும் தான் வருவாயை ஈட்டி கொடுக்கிறது.
தென்னக மாநிலத்தின் மக்களை வஞ்சிக்கும் வகையில் இங்கு ரயில்வே துறையினர் சரியான முறையில் முதலீடு செய்யாமல் அனைத்து முதலீடுகளும் வட இந்தியாவிற்கு திருப்பி விட்டதன் காரணம் தான் இந்த விபத்திற்கு காரணம்.
ஹிந்தி பேசும் மக்களை ஹிந்தி பேசாத ஊர்களில் இதுபோன்ற கடை நிலை மக்களிடம் தொடர்புடைய பணியினைக் கொடுத்தது மிகப்பெரிய தவறு. அவர் தூக்கம் காரணமாக இந்த விபத்துக்கு முழுமையான காரணம் இங்கு உள்ளூர் மக்களோ அல்லது உள்ளூர் மொழி பேசும் மக்களை பணியில் அமர்த்தியிருக்க வேண்டும்.
கேட்டைத் திறக்கச் சொல்லி இரு சக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்
கேட்டைத் திறக்கச் சொல்லி இரு சக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்
கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து குறித்து திருச்சிராப்பள்ளி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் விளக்கமளித்தார்மூடப்பட்டிருக்க வேண்டிய நேரத்தில் கேட்டை திறந்து விட்டது பெரும் குற்றமே. உடனடியாக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும்,படு காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2.5 லட்சமும், மற்றவர்களுக்கு ரூபாய் 50,000 மும் இன்றே அளிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அந்த இடத்தில் வாகனங்கள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்து, நிதியும் ஒதுக்கிய நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதியளிக்காது இருந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அனுமதி அளிக்காததற்கான விளக்கத்தை தமிழக அரசு அல்லது அம்மாவட்ட ஆட்சியர் அளிக்க வேண்டியதோடு, அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டு அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்த நிலையில் கடலூர் ரயில் விபத்து விசாரணைக்கு கேட் கீப்பர், ஓட்டுநர்கள் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி அலுவலகத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாக வேன் ஓட்டுநர், கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பலத்த காயமடைந்த இரண்டு மாணவர் மற்றும் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். இந்த விபத்தில், சாருமதி (வயது 16), விமலேஷ் (வயது 10), செழியன் (வயது 15) ஆகிய பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்