நேற்று ஜூலை மாதம் 28 ஆம் தேதி நீதியரசர்கள் ஜி.ஆர்சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வில் விசாணைக்கு ஆஜரானார் வழக்குரைஞர்
வாஞ்சிநாதன். அப்போது அவரளித்த பேட்டி காணொளிக் காட்சியைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அதை படிப்பதற்கு தடுமாறிய வக்கீல் வாஞ்சிநாதனைப் பார்த்து, "சத்தமா படிங்க..எனக் கூறினார் நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன்.
இதையடுத்து வாஞ்சிநாதன், "நான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கமளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு எந்த நிலையில் உள்ளது என்பதில் எனக்குத் தெளிவில்லை. நீங்கள் கேட்பது கேள்விக்கு தொடர்பானதாக இல்லை. அதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கவில்லை. வீடியோவை பார்த்து என்னால் விளக்கமளிக்க முடியவில்லை. உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?" என்றார். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. அதுவும் ஒருவருக்கு நீங்கள் ஆஜராகிய அந்த வழக்கில் வந்ததால் தான் புகார் குறித்து உங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மேலும்
நீங்கள் கடந்த நான்கு வருடமாக என் மீது குற்றம்சாட்டி வருகிறீர்கள். நான் இதுவரை உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் என்னுடைய தீர்ப்பை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஜாதி மதப் பாகுபாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." என்றார் .
இந்நிலையில், வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்தார்.
ஓய்வுபெற்ற பத்து கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட ஓய்வு நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு என்பது கடவுள் பக்தி கொண்ட நீதிபதி மீது என்பது தான் இங்கு உண்மையான பிரச்சினைகள் ஆகும் இந்த விவகாரத்தின் விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா அமர்வுக்கு அனுப்புவதாகவும், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து, தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்
கருத்துகள்