திருப்பூரில் அண்ணனையும் அண்ணன் மகனான வக்கீலையும் படுகொலை செய்த தம்பி மற்றும் கூலிப்படை காவல்துறையில் சரண்
தவறுக்கு மேல் தவறு அண்ணனையும் அண்ணன் மகனான வக்கீலையும் படுகொலை செய்த கொடூரம் தாராபுரம் படுகொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: வழக்கறிஞர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட கூலிப்படையாகச் செயல்பட்ட 5 பேர் தாராபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். தாராபுரம் லிங்கசாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவி சுபத்ரா தேவி மகன் முருகானந்தம் (வயது 35) சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். லிங்கசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள சாட்சிகளின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலையாகினர்.
இதனால் முருகானந்தம் தந்தை கொலைக்கு தனது சித்தப்பா தண்டபாணி தான் காரணம் என அவரை சட்டப்படியோ அல்லது வேறு வகையிலோ பழி வாங்க வேண்டும் என்று சபதம் எடுத்ததாகவும்.
அதற்காகவே முருகானந்தம் சட்டம் படித்தாராம். சித்தப்பா தண்டபாணி தாராபுரம் நகராட்சி மத்திய பஸ் நிலையம் எதிர்புறம் தேன்மலர் மெட்ரிக்குலேசன் பள்ளியை நடத்தி வந்தார். தனது அண்ணன் மகன் சபதம் எடுத்த தகவல் அறிந்ததும் தண்டபாணி உஷாராகவே இருந்து வந்தார். மேலும் தனது மகன் கார்த்திகேயனையும் (வயது 34) சட்டம் படிக்க வைத்தார்.
தற்போது பள்ளியை மகன் கார்த்திகேயன் கவனிக்கிறார். இந்த நிலையில் பள்ளி நடத்த 3வது தளம் வரை அனுமதி பெற்றிருந்த தண்டபாணி சட்டவிரோதமாக 4வது மாடியைக் கட்டி அங்கும் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இதை அறிந்த முருகானந்தம் தண்டபாணியை சட்டரீதியாக பழிவாங்க இதுதான் சரியான நேரம் என 4 வது மாடி கட்டியது சட்டவிரோதம் என சென்னை உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பள்ளியின் 4 வது மாடியை இடித்து அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. அதன் படி கல்வித்துறை அலுவலர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் கோடை விடுமுறையின் போது கூடுதல் கட்டிடத்தை இடித்துக்கொள்வதாக பள்ளித் தாளாளர் தண்டபாணி உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்த படி கூடுதல் கட்டிடத்தை இடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முருகானந்தம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து வேறுவழியின்றி மே மாதம் பள்ளியின் 4 வது மாடி இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் முருகானந்தம் ஒட்டுமொத்த பள்ளிக் கட்டிடமும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகவும் கட்டிடம் உறுதித்தன்மை இல்லாமல் உள்ளதாகவும் வழக்கைத் தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் மீது விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்டபாணிக்கு நோட்டீஸ் வந்தது. அதனால் முருகானந்தம் மீது கடும் ஆத்திரமடைந்த சித்தப்பாவான தண்டபாணி முருகானந்தத்தை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமான கூலிப்படைக்கு தகவல் தெரிவித்து கடந்த சில நாட்களாக தன்னுடைய பள்ளி வளாகத்திலேயே கூலிப்படையை தங்க வைத்திருந்தாராம் இந்த நிலையில் பள்ளிக் கட்டிடத்தின் உறுதிதன்மை தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று மதியம் நீதிமன்ற ஊழியர் ஒருவர், இரண்டு சர்வே நில அளவர் மற்றும் உறவினர் ஒருவர் என 4 பேருடன் வக்கீல் முருகானந்தம் ஒரு காரில் வந்த போது காரை பள்ளியிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் சாலையோரம் நிறுத்திவிட்டு நீதிமன்ற ஊழியர்களுடன் முருகானந்தம் நடந்து வந்தார். அவர்களை பள்ளிக்குள் விட காவலாளி அனுமதி மறுத்ததனால் திரும்பி கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நீதிமன்ற ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போது ஏற்கனவே தயாராக இருந்த கூலிப்படையினர் அரிவாளால் முருகானந்தத்தின் பின்தலையில் வெட்டினர். நிலை குலைந்து சரிந்து விழுந்ததும் அந்தக்கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவாகினர். இதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நீதிமன்ற ஊழியர்கள் அலறித் தப்பி ஓடினர்.
சிறிது தூரம் சென்றதும் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இக்கொலை தொடர்பாக பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்