மின்சாரக் கம்பத்தை மாற்றி அமைக்க ரூபாய்.15,000/- லஞ்சம் கேட்டு வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
கவிதப்பா என்பவர் வெங்கடேசபுரம், சூளகிரி தாலுக்கா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருகிறார். புகார்தாரரின் நிலத்தின் நடுவில் மின்கம்பி செல்லும் பாதையும் மற்றும் மின் கம்பமும் உள்ளது.
புகார்தாரர் தன்னுடைய நிலத்தில் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கும்படி மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மாணக் கழக அலுவலகம், அதிமுகம், சூளகிரி தாலுக்கா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மின் கம்பத்தை மாற்றுவதற்குண்டான கட்டணத்தையும் செலுத்தியிருந்தார். விண்ணபத்தினை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுக்க மின் வாரியத்தில் உதயகுமார் என்ற உதவி மின் பொறியாளர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்கா அதிமுகம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மாண கழக அலுவலகத்தில், தனக்கு ரூபாய்.15,000/- லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கிருஷ்ணகிரி மாவட்டப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் 10.07.2025, ஆம் தேதி பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதயகுமார், உதவி பொறியாளர், லஞ்சப் பணம் ரூபாய்.15,000 த்தை புகார்தாரரிடமிருந்து பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்