மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம்
உரிய அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி முத்திரைமிட வட்டார வளர்ச்சி அலுவலர் எனும் ஊராட்சி நிர்வாக சிறப்பு அலுவலர்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;கிராமப்புற ஊராட்சி மன்றங்களில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி முத்திரை வைக்க ஊராட்சிகளின் நிர்வாக சிறபஙஅலுவலர்களுக்கு அனுமதி உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாக சிறப்பு அலுவலரின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடமிருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதிச் சான்றினைக் கோரி உரிய அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக கள் ஆய்வு மற்றும் அளவு ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அனுமதி ஊராட்சிகளின் நிர்வாக அலுவலரான BDO எனும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடையாறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கரையோரங்களை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற 8 வார காலத்தில் சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, நீர் வள ஆதாரத்துறை, குடிசை மாற்று வாரியத்துறை என அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலைகளில் ஒருபோதும் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. சென்னையில் உள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன.
கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்புத் திட்டம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு போன்ற திட்டங்களின் மூலமாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் புற்றீசல் போல ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, அடையாறு கடலில் கலக்கும் கழிமுகம் உள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கரையோரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதை முதலில் இந்த சிறப்பு அலுவலர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் மூடி முத்திரை வைப்பார்களா என்பதும் அது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்புகள் மீது இந்த ஊராட்சி அலுவலர்கள் மூடி முத்திரை வைப்பார்களா அல்லது இந்த உத்தரவும் ஊழல் நாடகம் தானா என்பது இனிமேல் தான் தெரியும். ஊராட்சி சிறப்பு அலுவலர்கள் ஊராட்சி உதவியாளர்கள் என்ற செயலர்கள் அல்ல எக்ஸ்கியூட்டிவ் ஆன வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே
கருத்துகள்