கொலையான ஆம்ஸ்ட்ராங் வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற அவர் மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்
படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 17 நபர்கள் மீது காவல்துறையினர் போட்டிருந்த 'குண்டர் தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சிறையடைக்கப்பட்ட நாகேந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவின் மீது தீர்ப்பு.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், ஜூலை மாதம் 5-ஆம் தேதி 2024- ஆம் ஆண்டில் சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். விசாரணையில் ஆளும்கட்சியின் தலையீடு இருப்பதாகவும், அதனால் அந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசும் காவல்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொலை நடந்த சிறிது நேரத்திலேயே 'இது அரசியல் கொலையல்ல' என காவல்துறை அவசரமாகக் கூறியது. அதே நேரத்தில் 'ஆம்ஸ்ட்ராங் ஒரு ரௌடி. இது ரௌடிகளுக்கிடேயிலான கொலை' என சமூக ஊடகங்களில் செய்தி பரப்பினார்கள். முன்னாள் முதல்வர் மாயாவதி சிபிஐ விசாரணை வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை திமுக அரசு நிராகரித்தது. இந்தக்கொலையில் ஆருத்ரா மோசடிக் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், ஆருத்ரா கும்பலை விசாரணை செய்ததாக எந்தத் தகவலும் இல்லை. சம்போ செந்தில் என்பவனை முக்கியக் குற்றவாளியாக காவல்துறை கூறியது. ஆனால், அவனை இதுவரை கைது செய்து விசாரணை நடத்தாமலேயே
குற்றப்பத்திரிக்கையை காவல்துறை தயாரித்து விட்டது. இதெல்லாமும் தான்
ஆளும்கட்சியினரின் மீதான ஐயங்களை எழுப்புகின்றன. இவ்வழக்கில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கூறிய பிறகும் சிபிஐ விசாரணைக்கு அரசு ஏன் தயங்குகிறது.
காவல்துறையினரால் கொல்லப்பட்ட அஜீத்குமார் வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்த திமுக அரசு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற ஏன் தயங்க வேண்டும். என்ற வினா உள்ள நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது
கருத்துகள்