சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் போட்டி விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'மீது
ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய், வயது 20. இவர், மயிலாப்பூரில் தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். அதேபோல், அயனாவரம் பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்த அபிஷேக், வயது 20. இவரும், அதே கல்லுாரியில் படிக்கும் நிலையில்
பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவை காவல்துறை தேடிய நிலையில், நேற்று அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். நித்தின் சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, திருமங்கலம் பள்ளி சாலையில், பள்ளித்தோழன் மோகனின் பிறந்த நாளை கொண்டாடினர்.
அதே பகுதியில் உள்ள 'இராவுத்தர் தலைப்பாக் கட்டி பிரியாணிக் கடையில் சாப்பிட்டனர் பின்னர், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை அபிஷேக் ஓட்ட, பின்னால் நித்தின் சாய் அமர்ந்து, ஹெல்மெட் அணியாமல் சென்றார்கள். திருமங்கலம் பள்ளிச் சாலையிலிருந்து பார்க் சாலை நோக்கிச் சென்றனர்.அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில், பள்ளி சுவரில் துாக்கி வீசப்பட்டு, நித்தின் சாய்க்கு தலை, மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார்.தகவல் அறிந்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்தனர். நித்தின் சாய் உடலைக் கைப்பற்றி, '108' ஆம்புலன்ஸ் மூலமாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்களின் பரிசோதனையில், நித்தின்சாய் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அபிஷேக், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் காவல் நிலையத்தில் விபத்து என, வழக்குப் பதிந்தனர். கார் மோதியதில் நொறுங்கிய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரை காவல்துறையினர் தேடி வந்தனர்.கொலை செய்த நிலையில் அது அம்பலமானது இந்த நிலையில், திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவில், நித்தின் சாயின் தந்தை சுரேஷ் என்பவர், புகார் மனு அளித்தார். அதில், 'என் மகன் மீது சொகுசுக் காரை ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகார் படி தி மு க கவுன்சிலர் பேரன் அராஜகம்
சென்னை பெருநகர மாநகராட்சி திமுக கவுன்சிலர் கே கே நகர் தனசேகரனின் பேரன் சந்துரு, அவன் நண்பர்களுடன் சேர்ந்து 20 வயதான மாணவன் ஒருவனை நேரடியாகக் காரை ஏற்றி கொலை செய்திருக்கிறார்கள்.
வெறி செயல் என்று பத்திரிகைகளின் செய்தி சொல்கிறது.
வெறி மட்டுமல்ல இதுவும் அதிகார ஆணவக் கொலை தான்.
"என்னை யார் என்ன செய்ய முடியும்" என்ற ஆணவம் .
மாணவர்களுக்குள் ஏதோ காதல் விவகாரம் அது .சண்டையாக மாற , அடிபட்ட ஒரு மாணவனுக்கு ஆதரவாக செயல் பட்ட நிதிஷ் சாய் என்ற இன்னொரு மாணவனை ரேன்ஜ்ரோவர் காரில் நண்பர்களுடன் வந்த சந்துரு என்ற பையன் கே.கே.நகர் திமுக கவுன்சிலர் தனசேகரன் பேரன் நேரடியாக காரை ஏற்றி, அந்த நிதிஷ் சாய் பயணித்த இரு சக்கர வாகனத்தை இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.
கீழே விழுந்தவன் மேல் காரை ரிவேர்ஸ் எடுத்து மறுபடியும் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள் .
வெறும் விபத்தாக பதிவாகிய வழக்கு, இறந்த மாணவனின் தந்தையின் புகாரின் பேரில் கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.
வேண்டுமென்றே காரை ஏற்றியது
ரிவேர்ஸ் வந்து மறுபடியும் ஏற்றியது படக்காட்சியாகக் கிடைத்துள்ளது.
விபரம் தொலைக் காட்சிகளில் வந்ததும், வேறு வழியில்லாமல் சரண்டரான திமுக கவுன்சிலர் கே கே நகர் தனசேகரனின் பேரன்
" காரை நான் ஒட்டவில்லை. பயமுறுத்தத்தான் முயன்றோம் " என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான் .
மனிதன் படத்தில் நியாயம் கேட்ட நடிகர் மற்றும் துணை முதல்வர் உள்ள
நடப்பது மக்கள் ஆட்சியா அராஜக ஆட்சியா ?
என கேள்வி எழுப்பிய எதிர் கட்சிகள் மத்தியில்
முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா ?
அவருக்கு தெரியவோ, புரியவோ வாய்ப்பில்லை என்கிறார்கள் அந்த கட்சிக்காரர்களே.
காரணம் இந்த தனசேகரன் வரலாறு அப்படி இவரது பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் கடந்த 35 ஆண்டுக்கு முன் சென்னை தாதாவாக மற்றும் திமுக பிரமுகராக இருந்த சைதை கிட்டுவின் கை பானங்களில் ஒரு நபர்
வேறு வழியே இல்லை .தயவுசெய்து இந்த குண்டர்களின் அநியாயங்களை தடுத்து மக்களை காப்பாற்றுங்கள் .."
இது சம்பந்தமாக சில நெஞ்சை பதற வைக்கும் செய்திகள்
கொலைகாரனான சந்துருவின் தாத்தா திமுக கவுன்சிலர் கே கே நகர் தனசேகரன் முன்பு குண்டர் சட்டத்தில் கைதானவர் .தாத்தாவின் பேரை காப்பாற்றுகிறார் பேரன் .
இவரே வெள்ள நிவாரண கூட்டத்தில் பிரச்னை செய்து உயிர் பலியாக காரணமானவர் .
3அவரது லீலைகள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது
நேற்று சரணடைந்த சந்துருவை திமுகவினர் பெருங்கூட்டமாக தியாகியைப்போல காவல் நிலையத்துக்கு கூட்டி வந்தார்களாம்.
கவுன்சிலர் பேரனுக்கே ரேஞ் ரோவர் கார் என்றால் கவுன்சிலரிடம் என்ன இருக்கும் ? இவர் வீட்டில் நடந்த விசேடம் ஒன்றில் நடிகை நமீதா நடனமாடிய நிகழ்வு உண்டு
எல்லாவற்றுக்கும் மேலாக இறந்த நித்தின் சாயின் அன்னை அரற்றும் வீடியோ பார்த்தேன்
" என் மகனை நேரடியாக காரை ஏற்றி கொன்று விட்டு அந்த கவுன்சிலர் பேரன் கார் கதவை திறந்து பார்த்து சிரித்தானாம் .அப்படித் தான் கொல்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்ற எக்காள சிரிப்பாம் ."
அதை சொல்லும்போது அந்த பெண்ணின் முகத்தில் அழுகை இல்லை . கோபமும் இல்லை .வெறுமை வெறும் வெறுமை மட்டுமே இருந்தது .அவருக்கே தெரிந்திருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று .நாளைக்கே சி சி டி வி காட்சிகள் அழிக்கப் படலாம் .
கொலையை பார்த்த நண்பர்கள் அனைவரும் பார்க்கவில்லை எனலாம் அந்த அன்னையே அது என் மகனில்லை எனலாம் -மற்ற மகன்கள் மகள் வாழ வேண்டுமல்லவா ?
.ஜெ.ஜெயலலிதா இப்போது முதல்வராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பலரும் எண்ணிப்பார்க்க வெறுமையோடு…...
இந்த சம்பவம் பொதுமக்கள் பேசும்.அராஜகம் .காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு.. கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு தி.மு.க.வினர் புடைசூழ காவல் நிலையத்தில் சரணடைய கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் கார் பறிமுதல்.. அவருக்கு வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது அது என்னங்க ஸ்பெஷல் திமுக பிரமுகர். க. தனசேகரன். தலைமைச் செயற்குழு உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் கணக்குக் குழுத் தலைவர். மண்டலத் தலைவர். விருகம்பாக்கம் தொகுதியின் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்.
எம்ஜீஆர் நகர் அரசு பள்ளியில் வெள்ள நிவாரணம் பெற வந்த மக்களை தவறாக வழி நடத்தி நெரிசலை ஏற்படுத்தி சிலரைக் கொன்ற குற்றவாளி.
சைதை கா.கிட்டு வளர்ப்பு. கள்ளச் சாராய வியாபாரி. தமிழ்நாடு வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு ஒன்றை மொத்தமாக மிரட்டி வாங்கி இன்று அவரது பெற்றோரின் பெயரில் அறக்கட்டளை மூலம் பலவிதமான கட்டப் பஞ்சாயத்துகள்.
இருநூற்றுக்கும் மேலான டாடா அபே தானிகள். இப்படியான பின்புலத்தை வெறும் பிரமுகர்னு எழுத எவ்வளவு பணமும் அழுத்தமும் பெற்றீர்கள் வியாபார ஊடகங்களே? என் மக்கள் பேசுவது நம் காதில் விழுகிறது.
கருத்துகள்