ஜவுளித்துறை அமைச்சகம். சமர்த் திட்டத்தின் கீழ் பயனாளிகள்
ஒழுங்கமைக்கப்பட்ட ஜவுளி மற்றும் தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்துறையின் முயற்சிகளுக்கு துணையாக, தேவை சார்ந்த, வேலைவாய்ப்பு சார்ந்த திறன் திட்டங்களை வழங்கும் நோக்கத்துடன், ஜவுளி அமைச்சகம் சமர்த்தை (ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டம்) செயல்படுத்தி வருகிறது. இது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் நூற்பு மற்றும் நெசவு தவிர, ஜவுளியின் முழு மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கியது. 24.07.2025 நிலவரப்படி, சமர்த் திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,724 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர் (தேர்ச்சி பெற்றுள்ளனர்) மற்றும் 88% பெண் பயனாளிகள் உட்பட 3,55,662 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திட்டத்தை எளிதாக செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும், ஜவுளி அமைச்சகம் ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை அமைப்பு (AEBAS) மூலம் முழுமையான தீர்வுகள், நிகழ்நேர வருகை ஆகியவற்றைக் கொண்ட வலுவான மென்பொருள் தளத்தைக் கொண்டுள்ளது.
இந்தத் தகவலை, இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜவுளித்துறை இணையமைச்சர் ஸ்ரீ ஸ்ரீ பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.
கருத்துகள்