பிரபலமான ஜவுளிக் கடை நிறுவனம் போத்தீஸ் இங்கு கடந்த 4 நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், கணக்கில் வராத 10 கிலோ தங்கமும், ரூபாய்.18 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போத்தீஸ். நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் என்பவரால் சிறிய அளவில் தொடங்கப்பட்டு, இன்று 98 ஆண்டுகளைக் கடந்த பிறகு பல கிளைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. தற்போது, நான்கு தலைமுறைகளைக் கடந்து போத்தி மூப்பனார் குடும்பத்தினர் ஜவுளிக்கடையை நடத்தி வருகின்ற நிலையில், கடந்த 4 நாள்களாக போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்கள் வசிக்கும் கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 12 அலுவலர்கள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையின் போது, வருமானம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், முதலீட்டு பதிவுகள் உள்ளிட்டவை விரிவாகவே பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள், நிலம் மற்றும் சொத்து கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கவனமாகச் சேகரிக்கப்பட்டதாகவும், போத்தீஸ் வணிகம் பல மாநிலங்களில் விரிவடைந்துள்ள நிலையில், அங்கு செலவழிக்கப்பட்ட நிதி தொடர்பான பதிவுகளும் சோதனையில் பரிசோதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வருமான வரித்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் நடத்தி வந்த சோதனை நிறைவுற்றது சோதனையில், 10 கிலோ தங்கம், ரூபாய்.18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூபாய் 18.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் சுமார் ரூபாய். 12 கோடி மதிப்பு 10 கிலோ தங்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரையான சோதனையில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி முறையாக செலுத்தாமல் இருப்பதும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்