உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்தத் தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாகும், 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கினர்.
இந்தியா உட்பட உலகின் முன்னோடி 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76 சதவீதம் தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1 சதவீதம் வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்தத் தொடங்கியுள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திரக் கொள்முதலாகும்.
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கிக் குவிக்கக் காரணம். உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கிக் குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35 சதவீதம் அதிகரித்து, நிதியாண்டு 2020 ல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 ல் 880 டன்னாக அது உயர்ந்துள்ளது.
உலகத் தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 ஆம் ஆண்டில் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35 சதவீதம் ஆகும், இது 2021 ஆம் ஆண்டில் 6.86 சதவீதமாக இருந்தது.
சீனாவின் மத்திய வங்கியும் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, மே மாதத்தில் தனது தங்க இருப்பை பல மடங்குக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
தங்க இருப்பு சேகரிப்பில் சீனாவின் வியூகம் கடந்த ஆண்டில் தங்கத்தை வாங்குவதை சீன மத்திய வங்கி தீவிரமாக கையாண்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தின் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் இருப்பு அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. அதோடு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.
சீனா தங்கம் வாங்குவதால் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயருகிறது. உலக தங்க கவுன்சிலின் முதுநிலை ஆய்வாளர் கிரிஷன் கோபால், மே மாதத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் சீனாவால் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 17 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. மொத்த தங்கத்தின் இருப்பு சீனாவில் 2,296 டன்னாக உயர்ந்துள்ளதாக கிரிஷன் கோபால் தெரிவித்தார்.
மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது.
முன்னதாக, சீன மக்கள் வங்கி 18 மாதங்கள் தொடர்ந்து விடாமல் தங்கம் வாங்கியது. பின்பு ஆறு மாதங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு நவம்பர் மாதம் மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கியது.
தங்கச் சந்தையில் சீனாவின் புதிய நடவடிக்கைகள்
சீனா தனது உள்நாட்டு தங்கச் சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் (SHFE), வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் தரகர்களையும் நேரடியாக சந்தையில் அனுமதிக்கும் என்று அறிவித்தது.
தற்போதைய விதிகளின்படி, வெளிநாட்டு தரகர்கள் மற்றும் பிற வர்த்தகர்கள் உள்நாட்டு இடைத்தரகர்கள் மூலம் வர்த்தகம் செய்ய வேண்டும். இனி, அவர்கள் நேரடியாக பரிவர்த்தனைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அமெரிக்க டாலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களில் மார்ஜினைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும்.
ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் கொண்டு வந்துள்ள இந்த விதிகள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் வர்த்தகத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும். இதனால் சீனா இன்னும் அதிகமாக தங்கம் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
உலக அளவில் தங்கம் வாங்கும் நாடுகள்
சீனா மட்டுமன்றி உலகம் முழுக்க இருக்கும் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.
மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது அமெரிக்காவில் நிலவும் சூழல், இன்னொரு பக்கம் ரஷ்யா மோதல் என எல்லா பக்கமும் தங்கம் ஏறவே வாய்ப்புகள் அதிகம்.. 10 முதல் 15% வரை உயரத் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகம். அதாவது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,500 போய்விடும். செய்கூலி, சேதாரம் சேர்த்தால் ரூ.14000 கிட்ட போய்விடும். அங்கிருந்து 40 சதவீதம் குறைந்தால் மட்டுமே ரூ.10,000க்கு வரும். அந்தளவுக்குக் குறையுமா என்றால் குறையாது" என்றார் அமெரிக்காவில் நிலவும் சூழல், இன்னொரு பக்கம் ரஷ்யா மோதல் என எல்லா பக்கமும் தங்கம் ஏறவே வாய்ப்புகள் அதிகம் அந்தளவுக்குக் குறையுமா என்றால் குறையாது" என்றார்
முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க விற்றால் ஒரு ரூ.200- ரூ.300 குறையலாம். 700 ரூபாய் கூட சரியலாம். இருப்பினும், அதையெல்லாம் பெரிதாகப் பார்க்கக்கூடாது. ரூ.9,500ஐ ஒரு பேஸ் போல எடுத்துக் கொள்ளலாம். அதைத் தாண்டி குறைவது கஷ்டம்.. தங்கம் விலை அடுத்த சில காலம் ரூ.9500 முதல் ரூ.10,200 என்ற ரேஞ்சில் இருக்கும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2500 ரேஞ்சில் இருந்தது. விலை ரூ.10,000க்கு எல்லாம் உயராது என்றே சொன்னார்கள். ஆனால், இப்போதே தங்கம் விலை ரூ.10,000க்கு போய்விட்டது.
தங்கம் விலை! குறைய வாய்ப்பே இல்லை என ஆனந்த் சீனிவாசன் தகவல்
கருத்துகள்