ரூபாய்.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது மதுரை கோவில் பாப்பாக்குடி சாமுவேல் மனோகரன். டெக்ஸ்டைல் ஏஜென்ட் ஆக .உள்ளவர்
மனைவியின் பெயரில் வீடு கட்டி வருகிறார். அவரது இடத்திற்கு முன் உள்ள மின்சார கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரி, மின்வாரியத்தில் விண்ணப்பம் செய்து 10 மாதங்களைக் கடந்துவிட்டது. இவரிடம் மின்வாரிய போர்மேன் கணேசன் ரூபாய். 5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சாமுவேல் மனோகரன் மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் அறிவுத்தலின் படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.5 ஆயிரத்தை போர்மேன் கணேசனிடம் அரசு சாட்சி முன்னிலையில் வழங்கினார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கணேசனை பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர். விசாரணை நடத்தி பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்