இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் சென்னை சூளைமேட்டில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய மாநிலச் செயலாளர் தேர்வு குறித்து 5 மணி நேரம் ஆலோசனைகாக் கூட்டம் நடைபெற்றதன் இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளராக இருந்த மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, '' இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு சண்டிகரில் இந்த மாதம் 25 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பல மாநிலத்தில் மாநில மாநாடு நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மாநில மாநாடு நடந்து முடிந்தது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், முத்தரசன் 10 ஆண்டுகளாக கட்சியை வழி நடத்தி இருப்பதால், கட்சி விதிகளின்படி மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகியதாக'' தெரிவித்தார்.
மேலும், '' கட்சிப் பணிகளில் முத்தரசன் எப்போதும் போல செயல்படுவார். அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றுமையோடு மாநிலச் செயலாளர் தேர்வுக்கான முடிவை எடுத்ததோம். இந்தியா இக்கட்டான நிலையில் இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என பிரதமர் அறிவிப்பு என்ன ஆனது? எனத் தெரியவில்லை. ஜனநாயகம் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பா.ஜ.க அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் காலூண்றலாம் என நினைக்கிறது. ஆனால், பாஜக உடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.'' என்றார்
கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியன் கூறுகையில், '' கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த திட்டங்கள் இருக்கிறது. அதே போல கூட்டுத் தலைமையுடன் கம்யூனிஸ்ட் கட்சியை வழி நடத்திச் செல்லவிருக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வோம். மக்கள் பிரச்சினைகள் குறித்து இன்னும் தீவிரமாக கம்யூனிஸ்ட் கட்சி போராடும். திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெறத் திட்டமிடுவோம் என்றவர், அரசியலில் நடிகர் விஜயின் வருகை இருந்தாலும், திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.'' எனத் தெரிவித்தார்.மேலும், '' கட்சிப் பணிகளில் முத்தரசன் எப்போதும் போல செயல்படுவார். அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றுமையோடு மாநிலச் செயலாளர் தேர்வுக்கான முடிவை எடுத்ததோம்.
கருத்துகள்