அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்கச் சிலை அமெரிக்க நாட்டில் பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ள
தங்கச் சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அமெரிக்கா பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி அமைப்பினர் இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர்.
பிட்காயினை கையில் வைத்து நிற்கும் வகையில் டொனால்ட் டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்து சிலையை நிறுவியவர்கள் கூறும்போது, "டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும்.
டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்" என்கின்றனர். இது குறித்து பார்வையாளர்கள் இது பாகுபலி திரைப்படத்தில் வரும் பல்வால்தேவன் சிலையை நினைவுபடுத்துவதாகக் குளிப்பிடுகின்றனர்.
கருத்துகள்