நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமனத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை, லஞ்சப் பணம் கை மாறியதைக் கண்டறிந்த ED
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமனத்துக்கு
தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை, லஞ்சப் பணம் கை மாறியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து அது குறித்து விசாரணை நடத்தும்படி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனருக்கு 232 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளது தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்து வருகிறார். அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்துகின்றனர். அது தொடர்பான சோதனைகள் வெவ்வேறிடங்களில் நடத்தப்பட்டதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்த போது அதிர்ச்சியளிக்கும் ஊழல் கண்டறியப்பட்டதில்,
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2025 ஆம் ஆண்டில் நடந்த தேர்வு முடிவில் பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்கென அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டு. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம்.6ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார் இவ்வாறு நடந்த பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் ரூபாய்.25 முதல் ரூபாய்.35 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து அரசு வேலையை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பாக ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்தக் கோரி 232 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலிப் பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் அதில் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காலியிடத்துக்கு ரூபாய்.25 லட்சம் முதல் ரூபாய்.35 லட்சம் வரை 150 பேரிடம் லஞ்சப் பணம் வசூலித்திருக்கின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுவலர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். என அந்தக் கடிதத்தில் அமலாக்கத்துறையின் சார்பாக குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலையில் பணியமர்த்த லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய ஆவணங்களில் அமைச்சர் கே. என்ஃநேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்தத் துறையின் செயலாளர் கார்த்திகேயன் IAS. மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் நிர்வாகத்திற்கு பெயர் போனவர் எனக் பேசப்படும் நிலையில் கார்த்திகேயனை இந்தத் துறையில் செயலாளராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்தது இதற்காகத்தானோ? இப்படி லஞ்சம் வாங்கி ஆட்களை வேலைக்கு போட்டது தான் ஊழல் ஒழிப்பா என பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனத்தில் மோசடி என்பது.
பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, உறுதி செய்யப்பட்ட பட்டியல் எனவும்
ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பட்டியலைத் தயாரித்தது, வாட்ஸ் அப் சாட்கள் மூலம் அனுப்பியதை கண்டறிந்து
கே.என் நேரு அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் உதவியாளர்களுக்கும் தொடர்பு எனத் தகவல்.
பணியில் சேர விரும்பியவர்கள் அமைச்சர் கே. என். நேருவின் சகோதர்களின உதவியாளர்களைத் தொடர்பு கொண்டனர்
ரூபாய்.25 லட்சம் முதல் ரூபாய்.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் செலுத்தத் தயாரானோரை தேர்வில் வெற்றி பெற வைத்துள்ள தாகவம்,
முக்கிய நபர்கள், சில யர் அதிகாரிகள், இடைத் தரகர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெற்றுள்ளனர் எனவும் இது குறித்து ஆளும் கட்சி தரப்பு மறுத்த நிலையில் கூறும் காரணம் இது தமிழ்நாடு காவல்துறை
DGP-க்கு அமலாக்கத்துறை இயக்குனர் தரப்பு
இரண்டு கடிதங்களை எழுதியுள்ளது..
முதல் கடிதம் அங்கித் திவாரி என்ற ED-ல் பணியாற்றிய உதவி இயக்குநர் கையும் களவுமாக லஞ்சம் வாங்கியதாக கைதான போது,
தமிழ்நாடு DVAC மதுரை ED அலுவலகத்தில் சோதனை நடத்தியது..
அந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED முறைப்படி கடிதம் எழுதி புகாரை பதிவு செய்தது..
ஆனால் அந்தக் கடிதத்தை அமலாக்கத்துறை இயக்குநரகம் வெளியிடவில்லை. பத்திரிகைகளுக்கும் தரவில்லை
இரண்டாவது கடிதம் தற்போது எழுதியுள்ளது..
அதற்கான காரணம் என்ன? 27-09-2024 அன்று
சென்னை அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்த ECIR/CEZO/1/15/2024 படி 07-04-25 to 09/04/25 வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை அமைச்சர் கே. என். நேரு
சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது..
24/07/25 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த ECIR-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து விட்டது..
இருந்தபோதும்,07/4/25 முதல் 09/04/25 வரை நடத்திய சோதனையின் போது
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்துள்ள முறைகேடு மற்றும் பணி நியமனத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து
கிடைப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் தான் DGP க்கு கடிதம் எழுதியுள்ளதாக ED கூறியுள்ளது
ஆனால்,அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை இயக்குனர் மாநிலத்தின் DGP க்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளது
கடிதம் எழுதிய அதை வெளியிட்டவர் யார் என்பதிலேயே கவனம் செலுத்தும் நபர்கள்ED,,Complaint தரவில்லை எனவும் Information கொடுத்துள்ளது எனவும்..அதன் பேரில் புகாரை பதிவு செய்ய இயலாது. எனவும்
எந்த வழக்கின் பேரில் நடத்திய சோதனையில் கைப்பற்றிய ஆதாரங்கள், என்று DGP-க்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதோ அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும்
ஆனால்,11/04/25 அன்று ED வெளியிட்ட Press Release-ல் சம்பந்தப்பட்ட துறை தொடர்பான முறைகேடு விஷயங்களை ED தெளிவாக குறிப்பிட்டுள்ளது
ஆனால் ED பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ரவிச்சந்திரன் தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதத்தில் நடந்த போது,இந்த முறைகேடு தொடர்பாகவோ,ஆதாரங்கள் கண்டறிப்பட்டுள்ளதாகவோ எந்த விஷயத்தையும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறவில்லை எனவும்
தற்போது DGP-க்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் எனவும்
Tasmac முறைகேடு தொடர்பான ED-ன் வழக்கில் அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சில இடங்களில் சீல் வைத்தார்கள்..சம்மன் கொடுத்தனர்..
ஆனால் இந்த விவகாரத்தில்
11/04/25 Press Release-ல் கூறிய குற்றச்சாட்டை 24/07/25-ல் உயர்நீதிமன்றத்தில் கூறவில்லை என்கின்றனர் திமுக அரசில் அரசு வேலைக்கு லஞ்சம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றாலும் வியப்பளிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் மற்றும் அவரின் சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்முறைகேடு மீதான சிபிஐ விசாரித்த புகாரின் அடிப்படையில் நடத்திய சோதனை ஒன்றில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஊழல்கள் குறித்த பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், தற்போது 2538 அதிகாரிகள் பணிக்கு நடைபெற்ற தேர்வில் குறைந்தது 150 பேருக்கு பணிநியமனம் வழங்க ஒரு ஒவ்வொரு பணிக்கும் ரூபாய் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை அதிகாரமிக்க அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கியவர்களால் லஞ்சம் பெறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்தப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலில் ஈடுபட்ட பல்வேறு நபர்களின் விவரங்கள், எப்படி இந்த மோசடி நடைபெற்றது என்பதோடு, லஞ்சப் பணம் எப்போது, யார் யார் மூலம் கைமாறியது என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களோடு 232 பக்க ஆவணங்களை காவல்துறைக்கு அளித்திருக்கிறது அமலாக்கத்துறை.
ஆனால், எல்லாம் தெரிந்தும் அமைதி காக்கிறது திராவிட மாடல் திமுக அரசு. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்வது கேலிக்கூத்து. உடனடியாக இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. அமலாக்க துறை விசாரணை செய்து விடுமோ என்ற அச்சத்தில் காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுப்பர்களேயானால், சிபிஐ விசாரணை என்பது தவிர்க்க முடியாததாகி விடும். குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்பதில் நாம் குறியாக இருக்க, குற்றவாளிகளுக்கு ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்று குறியாக இருக்கிறது திராவிட மாடல். என
பாரதிய ஜனதா கட்சியின். தலைமை செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி, தெரிவிதுள்ளார்
தகுதியின் அடிப்படையில் வேலை கொடுக்காமல் இப்படி லஞ்சம் வாங்கி வேலை கொடுப்பதால் தகுதி இல்லாத பலர் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்து அதுவும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டிய இடத்தில் பணியில் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். லஞ்சமாகக் கொடுத்த பணத்தை மீண்டும் பல மடங்காக வசூல் செய்வதிலேயே அவர்கள் கவனம் இருப்பதால் மக்கள் நலன் பற்றி எல்லாம் அவர்கள் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
நியாயமான அரசாங்கமாக இருந்தால் அமலாக்கத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் FIR பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஆனால் அதை செய்தால் இது வந்துடும், இதை செய்தால் அது வந்துடும் என்று பயந்து பதுங்கி ஆட்சி நடத்தும் திமுக அரசிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? என்பது முக்கியமானது எதிர் கட்சி களின் தலைவர்கள் கருத்து. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகி விசாரணையை சந்திக்க வேண்டும் மேலும் பணம் கொடுத்து பணி வாங்கியவர்கள் தகுதி நீக்கம் செய்து புதிய தேர்வு நடத்த வேண்டியது ஊழலற்ற அரசு என முதல்வர் நடவடிக்கை எடுத்தால் பாராட்டுக்கள் வரும். இந்த நிலையில் அமலாக்கத்துறை மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல நிலுவையில் உள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டால் இந்த ஊழலும் முடிவுக்கு வரும். நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அந்தத் தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்படையச் செய்திருக்கிறது.

























கருத்துகள்