தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது 8 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை
கடந்து சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழையளவு பதிவானது;
தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இரண்டு வாரம் தாமதமாகவே துவங்கியது. தற்போது சென்னை, திருவள்ளூர் கடலோரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களிலம் பலத்த மழை பெய்கிறது. கடந்து சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில்17 செ.மீ. மழை பதிவானதுது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழையளவு பதிவானது.
மேலும் தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, வடக்கிலிருந்து வடமேற்காக நகரக்கூடுமென்றும், வட தமிழகத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பரதேசக் கடலோரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 20.4 செ.மீ. வரை மழை அளவு பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது ஆனால் சென்னை வாழ் புலம்பெனயர்ந்த மக்கள் மட்டுமே அதிக மழை கண்டு பயம் கொள்ள வைக்கிறது ஆனால். தற்போது எஞ்சிய விவசாய மக்களோ அதீத மகிழ்ச்சியுடன் "திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்."
சிலம்பின் காப்பியத் துவக்கமே இயற்கை வழிபாடு தான், மழை இல்லை என்றால் அணைத்தும் இங்கில்லை தற்போது சதுப்பு நிலங்களைக் கூட விடாமல் வீடாக்கியவன் மட்டுமே மழையைக் கண்டு அஞ்சுகிறான்.விடுமுறை அறிவிப்பும் வருகிறது














கருத்துகள்