கேரளா மாநிலம் சபரிமலை ஆலயத்தில் துவார பாலகர் தங்கக் கதவை தாமிரம் என வெளியே கொண்டு சென்றது தற்போது அம்பலமானது-
தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிக்க 1998-ஆம் ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ பித்தளையும் வழங்கினார்.
கோவிலின் மேற்கூரை, பக்கச் சுவர்களில் சில பகுதிகள், வாசல், நிலை, படிகள் மற்றும் முன்புறமுள்ள துவார பாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு துவார பாலகர் சிலைகள், முன்பக்கத்தில் உள்ள கதவு, நிலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் புதிய வாசல், நிலை ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த சிலைகள் பராமரிப்புப் பணிக்கு இந்த ஆண்டு சென்னை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, இந்த நிலையில், அதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமானது தற்போது தெரியவந்தது.
ஆனால் 2019-ஆம் ஆண்டு 40 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள வாசல் மற்றும் நிலை ஆகியவை பராமரிப்பு பணிகளுக்காக பெங்களூருவை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவரிடம் கேரளா தேவசம் போர்டு வழங்கிய போது இவை அனைத்தும் தாமிரத்தகடுகள் என அப்போதைய சபரிமலை கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாக அலுவலரும், இப்போது துணை ஆணையருமான முராரி பாபு சான்றிதழ் அளித்த நிலையில் சபரிமலையில் புதிய நிலை மற்றும் வாசல் பொருத்தப்பட்டதாகவும்,
அதில் 4 கிலோ தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணி கிருஷ்ணன் போற்றி கூறியுள்ளார். பெங்களூருவில் வைத்து நிலம்பூர் தேக்கை பயன்படுத்தி புதிய வாசலை தயாரித்து அதை ஹைதராபாத் கொண்டு சென்று தாமிரத்தகடுகளை பதித்து, பின்னர் சென்னைக்கு கொண்டு வந்து தங்கமுலாம் பூசி சபரிமலைக்கு கொண்டு வந்து அவற்றைப் பொருத்தியதாக உண்ணிகிருஷ்ணன் போத்தி தெரிவித்துள்ளார். அப்படியானால் சபரிமலையிலிருந்து ஏற்கனவே கொண்டு சென்ற தங்கத் தகடுகள் பதிக்கப் பட்ட வாசல் கதவும், நிலையும் எங்கே போனது என்பதில் தான் மர்மம்.
விஜய் மல்லையா அளித்த தங்கத்தால் தான் சபரிமலை கோவிலின் வாசல் மற்றும் நிலை ஆகியவற்றில் தகடுகள் பதிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது. இதை அப்போது சபரிமலையில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவாமிநாதன் என்பவரும் உறுதி செய்துள்ளார். 27 வருடங்களில் தங்கத் தகடுகள் தாமிரமாக எப்படி மாறியது அதற்கு காரணமான ஊழல் பெருச்சாளிகள் யார் என அவர் கேள்வி எழுப்பினார்?,
ஆனால் இவை தாமிரத்தகடுகள் என அப்போதைய நிர்வாக அலுவலர் முராரி பாபு எப்படி சான்றிதழ் கொடுத்தார் எனும் கேள்வி எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது, தற்போது துணை ஆணையரான முராரி பாபு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.கேரளா உயர் நீதிமன்ற உத்தரவில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அலுவலர் சதீஷ், நிர்வாக அலுவலர் ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அலுவலர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலர்களே இந்த கூட்டுத் திருட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், இந்த வழக்கில் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளாவிலுள்ள கோவில்களை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பு, இது 1950 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கொச்சின் இந்து சமய நிறுவனங்கள் சட்டம் XV இன் கீழ் நிறுவப்பட்ட கேரளாவிலுள்ள பல்வேறு ஹிந்து கோவில்களின் நிர்வாகம் மற்றும் விழாக்கள்,பராமரிப்பு, சடங்குகள், யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனிக்கிறது. ஆனால் அலுவலர்கள் கைது செய்யப்படாமல் கேரளா மாநிலத்தில் ஆளும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினரயி விஜயன் அலுவலகத்தை மாநில பாஜகவினர் முற்றுகையிட்ட்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி போராட்டம் நடத்தினர் இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் போத்தியை திருவனந்தபுரம் அருகிலுள்ள அவருடைய வீட்டில் கைது செய்த புலனாய்வுக் குழுவினர், பத்தனம்திட்டா அழைத்து வந்து 10 மணி நேரம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து,பின் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சபரிமலை தங்க திருட்டு வழக்கில் முக்கிய நபராகக் கைது செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவனந்தபுரம் கிளிமானூர் அருகில் புலிமாத்தைச் சேர்ந்தவர் இவர், சில காலம் முன் சபரிமலை கோவிலில் இளைய பூசாரியாக சேருவதற்கு முன்பு தனது தந்தைக்கு புலிமாத் தேவி கோவிலில் உதவியாக இருந்தார். மேலும் பெங்களூருவிலுள்ள ஸ்ரீராமபுர ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பணியாற்றி தற்போது பெங்களூருவில் குடியேறியவர், கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் பணக்கார தொழிலதிபர்களுக்கு இடைத்தரகராக அதாவது புரோக்கராகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீராம்புரா கோவிலில் உதவி பூசாரியாக பணியாற்றிய பின்னர், 2004 ஆம் ஆண்டு அவர் பூசாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், வருமானம் இல்லாத போத்திக்கு கணிசமான நிதி மற்றும் சொத்துகள் எவ்வாறு கிடைத்தன என்பதை அலுவலர்கள் இப்போது ஆய்வு செய்கின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை அவரது வருமான வரிப் பதிவுகளில் நிலையான வணிக வருவாய் இல்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. திருவிதாங்கூர் தேவசம் போர்டு புலனாய்வு அறிக்கை, போத்தி தனிப்பட்ட முறையில் நிதியளித்ததாகக் கூறும் செலவுகள் உண்மையில் மற்றவர்களால் செலுத்தப்பட்டவை என்பதை வெளிப்படுத்துகிறது. தங்க முலாம் பூசப்பட்ட கதவிற்கு, கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தன் நிதியளித்ததாகவும், கோவிலின் செப்புப் பாயின் தங்க முலாம் பூசுவதற்கு பெங்களூருவைச் சேர்ந்த மலையாளி தொழிலதிபர் அஜிகுமார் நிதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இனி விசாரணை உரிய அலுவலர்களை கைது செய்து விசாரணை நடத்தி ஆலயக் கொள்ளைக் கும்பல் கைதாக வேண்டும் திருடிய ஆலய தங்கம் மீட்க வேணடும் இதை கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட மாநில கம்யூனிஸ்ட் அரசு சார்ந்த காவல்துறை செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்புகளாகும்,
















































கருத்துகள்