முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேதாஜியின் தேசிய வழியில் சித்தர் போல் வாழந்த சுத்த வீரர் தேவர் மஹான்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆங்கிலக் கிழக்கிந்திய பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழ்நாட்டில்  பெரும் படையை திரட்டி INA அனுப்பிய பெருமை தேவரைச் சேரும்.


அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் அப்போது மெட்ராஸ் மாகாண (தமிழ்நாட்டின்) தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்து நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கிய கட்சியாகும். தேவர் மூன்று முறை கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.






1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் கைது செய்து. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவரை சேர்த்த நிலையில் பின்னர் இந்த கொலைக்குத் தொடர்பிருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாதென நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 1939 ஆம் ஆண்டு திரிபுராவில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். அவர் காந்தி ஆதரவாளர். ஆனாலும் போஸ் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ் பெற ஆதராவைத் திரட்டினார்.







பின்னர் காந்தியின் தலையீட்டால் போஸ் அந்தப் பொறுப்பை விட்டு விலகி ஜூன் மாதம் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரைச் சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போஸுன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த போது தேவரவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினைக் கூட்டினார். 1929 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர்களும் மற்றும் தற்போது DNC யாக உள்ள சில சமுதாயத்தினரை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆங்கிலேய அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாமென கோரிக்கை விடுத்ததையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.







தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழிருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.

1934 ஆம் ஆண்டு அபிராமம் நகரில் மாநாடு கூட்டினார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர். அதில் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிரவர்ணத் தேவர், நவநீத கிருஷ்ண தேவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த சட்டத்தையே நீக்குவதற்காக போராடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.



ஆனால் சட்டத்தை நீக்குவதற்குப் பதில் மிகத் தீவிரமாக இதை பயன்படுத்த ஆரம்பித்தது அப்போதைய ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்த மதராஸ் மாகாணத்தின் அரசு. அப்போது மதராஸ் மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது நீதிக் கட்சி

தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது எனத் தீர்மானித்த தேவர்.1936ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.இந்த சமயத்தில் நடந்த ஜில்லா போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.


அதன் பின்னர் மதராஸ் மாகாண போர்டு தேர்தலில் நின்றார். இந்த சமயத்தில் ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜுவும் போட்டியில் குதித்தார். இதனால் யாரை ஆதரிப்பது என்பதில் காங்கிரஸாரிடேயே மோதலை யடுத்து குறுக்கிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி ஐயங்கார் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்தினார். தேவர் தேர்தலிலிருந்து விலகி குமாரசாமி ராஜுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டார் தேவர். இதனால் நீதிக் கட்சி பெரும் பீதியடைந்ததையடுத்து இராமநாதபுரத்தை விட்டு வெளியேறக் கூடாது என பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருக்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது.








1937 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். இராமநாதபுரம் சேதுபதி மன்னரைத் தோற்கடித்த தேவர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.

1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்யப்படுவதை பட்டாபி சீதாராமையா எதிர்த்தார். ஆனால் போஸுக்கு தேவர் முழு ஆதரவு தெரிவித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் போஸுக்காக ஆதரவு திரட்டினார்.

ஆனால் காந்தியின் ஆதரவுடன் போட்டியிட்ட சீதாராமையாவுக்கு பலம் கூடியது. இதனால் போஸ் தலைவராக தேர்ந்தெடுக்ப்பட்டவுடன் ராஜினாமா செய்ய நேரிட்டது.






இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார் போஸ். குற்றப் பரம்பரைச் சட்டத்தை காங்கிரஸ் அரசு நீக்காததால் அதிருப்தியில் இருந்து வந்த தேவர், போஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். கட்சி அப்போது  வங்கத்திலும் மதராஸ் மாகாணத்திலும் வளர்ச்சி கண்டது,1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 3 ஆம் தேதி, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த யாரும், நேதாஜியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், அவர் சார்ந்த எந்த நிகழ்ச்சிக்கும் பங்கு கொள்ளக் கூடாது என காங்கிரஸின் பூர்ஸ்வா தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.  அதையும் மீறி, மெட்ராஸ் பிரபல பொறியாளர் ஐயாசாமி  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து, வெள்ளி குடை பிடித்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரது வீட்டின் மூன்றாவது மாடியில், நேதாஜியை தங்க வைத்தார். அந்த மூன்று நாட்களும், நேதாஜிக்கு சிறப்பாக பணி செய்தார் ஐயாசாமி, 







1939, செப்டம்பர் மூன்றாம் தேதி மாலையில், சென்னை கடற்கரையிலுள்ள திலகர் கட்டடத்தில், ஸ்ரீனிவாச ஐயங்கார் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில், “தமிழ்நாடு பார்வர்ட் பிளாக்” Tamilnadu Forward Bloc என கட்சியின் கிளையைத் தொடங்கி வைத்துப் பேசினார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளராக, பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரை அறிவித்தார், நேதாஜி. மேலும், தேவரை “தென்நாட்டு போஸ்” என பெருமையுடன் கூறினார்




காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கு, 1939 ஆம் ஆண்டு, மார்ச் 29 ஆம் தேதியன்று, தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், காந்திஜியின் ஆதரவாளரான டாக்டர் பட்டாபி சீதாராமையா அவர்களுக்கும், நேதாஜிக்கும் பலத்த போட்டி ஏற்பட்ட தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1,580 வாக்குகளும், டாக்டர் பட்டாபி சீதாராமையா அவர்கள் 1,377 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினர்.



அந்த தேர்தலில், 203 வாக்குகள் வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். இருந்த போதும் தோல்வி அடைந்தவருக்கே விட்டுக் கொடுத்தார் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர், நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெற்றி பெற, முக்கியப் பங்கு வகித்தார்.






பின்னர் ஏற்பட்ட மனக் கசப்பால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மே மாதம் 1939 ஆம் ஆண்டு, “பார்வர்ட் பிளாக்” (Forward Bloc) கட்சியைத் துவக்கினார்.

1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதராஸ் வந்தார்.















INA - Indian National Army அமைப்பில், தேவரின் அழைப்பின் பேரில், பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால், பெரிதும் மனம் மகிழ்ந்த நேதாஜி அவர்கள், “அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், தமிழனாக, தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்” என ஆசைப் படுவதாகக் கூறினார்.

தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் விரும்பிச் சாப்பிடும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், நமது மாநிலத்திற்கு உரித்தான “மிளகு ரசத்தை” விரும்பினார்.

 பசும்பொன் உ முத்து ராமலிங்க த்தேவர், “நேதாஜி” என்ற தமிழ் வார இதழ் ஒன்றை தொடங்கினார்.








“கேப்டன் லட்சுமி சாஹல்” என்று அன்புடன் அழைக்கப் பட்ட, லக்ஷ்மி சுவாமிநாதனும், மலேசியா தமிழ் பெண்ணான ஜானகி ஆதி நாகப்பன், ராசம்மா பூபாலன் ஆகியோரும் நேதாஜி பெண்கள் ராணுவ படையான, “ஜான்சி ராணி படை பிரிவை” தொடங்கி சிறப்பாக செயல் பட்டனர். கேப்டன் லட்சுமி சாஹல் கணவர் பிரேம் குமார் சாஹலும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றினார். அதில் நமது முன்னோர்கள் சிலரும் உடனிருந்த சுதந்திரப் போராட்ட ராணுவ வீரர்கள் என பெருபிதம் உண்டு,

தனது 14-வது வயதில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பங்கேற்ற ஒரு பேரணியில், கலந்து கொண்ட ஜானகி அம்மாள், நேதாஜியின் கருத்துக்களால் கவரப் பட்டு, தான் அணிந்து இருந்த, விலை உயர்ந்த காதணியை, இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி திரட்டுவதற்காக வழங்கினார்.




இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற வேண்டுமென்றும் அதற்கு போர் தான் ஒரே வழி எனவும் திடமாக நம்பினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் பர்மா மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பணி செய்த தமிழர்களையும் மற்றும் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இணைத்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். அப்படி வெளிநாடுகளில் படை திரட்டிகையில் தமிழர்கள் ஏராளமாக பொருளுதவி செய்தது மட்டுமல்லாது தாமும் அவரது INA - இந்திய தேசீய படையில் சேர்ந்து பணி புரியவும் முன் வந்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழு விடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் தனது செயற்பாட்டை மேற்கொண்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி எனக் கருதினார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ் பெற்ற சூளுரையாகும்.

தாய்நாட்டைவிட்டு தனிமனிதனாக வெளியேறி, அயல்நாட்டில் இந்திய தேசிய இராணுவம் அமைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆயுதமேந்திய போராட்டத்தைத் தொடங்கினார் நேதாஜி.



என் வழி தனி வழி என போஸ் தனது இலக்கில் குறியாய் இருந்தார். அதற்காக ஐரோப்பா சென்று “ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று சேர்க்கும்” முயற்சியில் ஈடுபட்டு ஆதரவு தேட ஆரம்பித்தார்.                                                  தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகரில் புதன், வியாழக்கிழமைகளில் (அக்.டோபர் 29, 30) தேதிகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.இ துகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் : நாளை வியாழக்கிழமை (அக்டோபர். 30) நடைபெறும் நிலையில்     குருபூஜை விழாவில் துணை ஜனாதிபதி, முதலமைச்சர் பங்கேற்பதையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது    பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள  சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா். இதையொட்டி, அக்டோபர். 29, 30 ஆகிய தேதிகளில் கோரிப்பாளையம் சந்திப்பு வழியேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.


அதன்படி, தேவா் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் எம்.எம். விடுதி சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்வதற்கு அனுமதி கிடையாது.

கனரக வாகனங்கள்.. கனரக சரக்கு வாகனங்கள் அக்டோபர். 29, 30 தேதிதளில் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள், மதுரை மாநகருக்கு வெளியே உள்ள சுற்றுச் சாலைகளை பயன்படுத்தி செல்லவேண்டும்.

அவசர கால ஊா்திகள்.. தத்தனேரி முதன்மைச் சாலை, தமுக்கம், வள்ளுவா் சிலை சந்திப்பிலிருந்து வரக்கூடிய அவசர ஊா்திகள் வழக்கமாக செல்லக்கூடிய சாலையிலேயே செல்லலாம்.



இராமநாதபுரத்துக்கு.. தேவா் ஜெயந்தி விழாவுக்காக மதுரை மாநகரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வாகனங்களில், காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும். பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் சுற்றச்சாலை வழியே செல்லவேண்டும். பேருந்துகள். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியே பெரியாா் பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியே கணேஷ் திரையரங்கம் சந்திப்பு, காமராஜா் சாலை வழியே முனிச்சாலை சந்திப்பு சென்று, 144 சந்திப்பு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு வழியே செல்ல வேண்டும். ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் மேற்கண்ட வழித்தடத்தில் முனிச்சாலை சந்திப்பிலிருந்து, முனிச்சாலை வழியாக அம்சவள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வடக்குமாரட்டு வீதி வழியாக செல்லவேண்டும்.  பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் சுற்றச்சாலை வழியே செல்லவேண்டும்.பேருந்துகள்... மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியே பெரியாா் பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியே கணேஷ் திரையரங்கம் சந்திப்பு, காமராஜா் சாலை வழியே முனிச்சாலை சந்திப்பு சென்று, 144 சந்திப்பு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு வழியே செல்ல வேண்டும் அம்சவள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வடக்குமாரட்வீதி வழியாக செல்லவேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியே ஆரப்பாளையம் செல்லும் புகரப் பேருந்துகள், கே.கே நகா் ஆா்ச், ஆவின் சந்திப்பு, ஏ1 பாா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியே கபடி வட்டச்சாலை சென்று தத்தனேரி பாலம் வழியாக ஆரப்பாளையம் செல்லவேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா், ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் பெரியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா முத்தையா மன்றம், டாக்டா் தங்கராஜ் சாலை, காந்தி நினைவு அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலையம், பனகல் சாலை, சிவசண்முகம் பிள்ளை சாலை, வைகை வடகரை சாலை, ஓபுளா படித்துறை பாலம் வழியே வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்லவேண்டும்.



பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலைகளுக்கு செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்துகள் வழக்கம் போல எம்.எம். விடுதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி வட்டச்சாலை வழியாக செல்லலாம்.

எம்.எம் விடுதி சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப்பேருந்துகள் அனைத்தும் எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி. ரவுண்டானா வழியே ராஜா முத்தையா மன்றம் சென்று டாக்டா் தங்கராஜ் சாலை வழியாக செல்லலாம்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் புகரப் பேருந்துகள் அம்மா பாலம் வழியே கொன்னவாயன் சாலை, கூடல் புதூா் பாலம் வழியாக அலங்காநல்லூா் சாலை சென்று, வானொலி நிலைய சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஆனையூா், பனங்காடி, அய்யா்பங்களா சந்திப்பு, மூன்று மாவடி சந்திப்பு, சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.கபடி வட்டச்சாலை சென்று தத்தனேரி பாலம் வழியாக ஆரப்பாளையம் செல்லவேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா், ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் பெரியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா முத்தையா மன்றம், டாக்டா் தங்கராஜ் சாலை, காந்தி நினைவு அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலையம், பனகல் சாலை, சிவசண்முகம் பிள்ளை சாலை, வைகை வடகரை சாலை, ஓபுளா படித்துறை பாலம் வழியே வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்லவேண்டும்.

பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலைகளுக்கு செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்துகள் வழக்கம் போல எம்.எம். விடுதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி வட்டச்சாலை வழியாக செல்லலாம்.

எம்.எம் விடுதி சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப்பேருந்துகள் அனைத்தும் எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி. ரவுண்டானா வழியே ராஜா முத்தையா மன்றம் சென்று டாக்டா் தங்கராஜ் சாலை வழியாக செல்லலாம்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் புகரப் பேருந்துகள் அம்மா பாலம் வழியே கொன்னவாயன் சாலை, கூடல் புதூா் பாலம் வழியாக அலங்காநல்லூா் சாலை சென்று, வானொலி நிலைய சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஆனையூா், பனங்காடி, அய்யா்பங்களா சந்திப்பு, மூன்று மாவடி சந்திப்பு, சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள் அம்மா பாலம் வழியாக கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி வட்டச்சாலையிலிருந்து வைகை வடகரை வந்து வலது புறம் திரும்பி, தத்தனேரி பாலத்தின் கீழ் உள்ள சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமானவரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீ.பீ.குளம் சந்திப்புக்குச் சென்று வடமலையான் மருத்துவமனை வழியாக எஸ்.பி. பங்களா சந்திப்பு, தாமரைத் தொட்டி, நீதிமன்றம் வழியே மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.

இருசக்கர வாகனங்கள். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் செல்லும் பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கே.கே. நகா் ஆா்ச், ஆவின் சந்திப்பு, ஏ1 பாா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியே வைகை தென்கரைக்கு சென்று, வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்லலாம்.






பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகா்கோவில் சாலைகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தற்போது செல்லும் வழக்கமான வழித்தடங்களின் வழியாகவே செல்லலாம்.

எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பொதுமக்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எம்.எம். விடுதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, பெரியாா் மாளிகை, அழகா்கோவில் சாலை சென்று வலதுபுறம் திரும்பி, தமுக்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக செல்லவேண்டும்.






ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரியிலிருந்து நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் நான்கு சக்கர வாகனங்கள், கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி ரவுண்டானாவிலிருந்து வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமானவரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீ.பீ. குளம் சந்திப்பு வழியாக வடமலையான் மருத்துவமனைஎஸ்.பி. பங்களா சந்திப்பு சென்று செல்லலாம்.

ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரியிலிருந்து நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள் செல்லூா் கபடி வட்டச்சாலை எம்.எம். விடுதி சந்திப்பு சென்று மேற்கண்ட நான்குசக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களை பயன்படுத்தி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.         கடந்த காலங்களில் கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் தான் நடத்திய பூஜை முறைகள் அவர் இல்லாத நிலையில் புதியவர்கள் பூஜை நடத்திய நிலையில் கவரப்பட்டு ஸ்ரீ தர் வாண்டையார் பூசாரி மீது தாக்குதல் நடத்திய நிகழ்வு பலரும் அச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.




பசும்பொன் தேவர் திருமகன் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பூசாரியை தாக்கியதுடன் பூசாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து தேவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா செம்தார். அவர் மீதிருந்த மதிப்பை குறைத்துக் கொண்டார்.





பசும்பொன் திரு உ. முத்துராமலிங்க தேவர் ஜி அவர்களின் ஜெயந்தி விழாவில்  ஆலயத்தில் வழிபட்ட குடியரசு துணைத் தலைவர் வெளியிட்ட பதிவு "தேவர் பெருமான்  ஒரு சிறந்த போர்வீரர், அச்சமற்ற போராளி, மற்றும் மதிப்பிற்குரிய துறவி, பசும்பொன் திரு.உ முத்துராமலிங்க தேவர் ஒரு உண்மையான தேச பக்தர், அவர் தனது வாழ்க்கையை தேசத்திற்காகவும் அதன் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பக்தியுள்ள சீடர், அவர் சிந்தனையிலும் செயலிலும் தைரியம், தியாகம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றைக் கொண்டிருந்தார். ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த ஒரு சித்த புருஷரான தேவர் ஜி, "தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்" - தேசியமும் ஆன்மிகமும் - வாழ்க்கையின் இரட்டை வழிகாட்டி விளக்குகளாகக் கண்டார். அவர் அனைத்து சமூகங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒரு தலைவராக இருந்தார், மற்றவர்களின் நலனுக்காக தனது சொந்த நிலங்களைக் கூட கொடுத்தார். ஒரு ஆர்வமுள்ள படிப்பாளி மற்றும் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளர், அவர் தனது வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் மக்களை ஊக்கப்படுத்தினார். அவர் பிரிட்டிஷ் ஆங்கிலேய அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடினார், தேசத்திற்காக சிறைவாசத்தைத் தாங்கினார், மேலும் அவர் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியடையாமல் இருந்தார் - மக்களின் அசைக்க முடியாத அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார். அவரிடம் பிரார்த்தனை செய்வது, சமுதாயத்திலும் அரசியலிலும் ஒழுக்கம், கடமை, நேர்மை ஆகியவற்றைக் கௌரவப்படுத்துவதற்கு ஒப்பானது. அவரது தைரியம், தியாகம் மற்றும் நீதியின் வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் பங்கேற்பதை பாக்கியமாகவே கருதுகிறேன், இந்திய துணை ஜனாதிபதி என்ற முறையில், எனது முதல் தமிழ்நாட்டு பயணத்தின் போது இந்த ஆண்டு விழாவில் மீண்டும் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பாரம்பரியம் என்றென்றும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.. இந்த நிலையில்        "தேசியத் தலைவர் திரைப்படம் நாளை வெளியிடப்படுகிறது அதை வெளியிடத்
தடை இல்லை" என அறிவிப்பு “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த 'தேசியத் தலைவர்' திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என இயக்குனர் அரவிந்தராஜ் தகவல் கூறிய நிலையில்          ஆனால் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல; சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது; தயாரிப்பாளரின் பதிலை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது

- ‘தேசிய தலைவர்' படத்தை திரையிடவும், ஜாதிய பிரச்னைகளை தூண்டும் வகையிலான காட்சிகளை நீக்கவும் கோரிய மனு மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து; தணிக்கை வாரியம், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் பதில் அளிக்கவும் உத்தரவு








                                                            பல கிராமங்களின் நிலச்சுவானாக வாழ்ந்த பின் தலைவர் என்றான பின், வீடு என்பது அவர்க்கில்லை.. அந்த வார்த்தைக்கொரு இலக்கணமாய் வாழ்ந்தவர் யார், அவரே தெய்வீகத் தேவர்.

மனைவியில்லை, குடும்பமில்லை சொத்தும் அவர்க்கில்லை...இந்த  தேசம் தானே வீடு என்றும் தேசியம் தான் வாழ்க்கை என்றும்      வாழ்ந்தவர் யாரு அவர்தான் தெய்வீகத் தேவரு ,                

ரூபாய் நோட்டைக் கொடுத்து ,ஓட்டைப் புடுச்சி, ஆட்சி அமைப்பது இந்தக்காலம்.   மேடையில் மட்டும் நீதியும், நியாயமும் கொட்டி முழக்குவது இந்தக்காலம்,                குற்றம் குறை யாரும் சுட்டிக் காட்டிடாத சுத்த வீரம் விளைந்த சொக்கத் தங்கம்               பசும் பொன் உ. முத்துராமலிங்கத் தேவரய்யாவின் 118 வது ஜெயந்தி நாளில் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்துகிறது.






இந்த நிலையில் சில கூடுதல் வரலாற்றுத்  தகவல்       

குற்றப் பரம்பரை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட கோவிந்த தோம்ஸ் கூட்டத்தினரின் மீதான சுதந்திரத்திற்கு முந்தைய வங்காள அரசு குற்ற புலனாய்வு பிரிவின் துண்டு பிரசுரம்.
            

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் வலியுறுத்தலின் விளைவால், 1947- ஆம் ஆண்டில் காவல்துறை அமைச்சரான பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டாலும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே அது காலாவதியானது.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கல்கத்தா ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்ட ஜாதிகள் பல 






 இந்தப் பட்டியல் தான் அது

இந்திய விடுதலைக்குப் பின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கியதுடன், இந்திய அரசும் மாநில அரசுகளும், குற்றப் பரம்பரை ஜாதிகளாக்கப்பட்டவர்களைச், சீர்மரபினர் பட்டியலில் வைத்து, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சேர்த்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...