ஜப்பான் வாக்கெடுப்பில் வெற்றி வரலாற்றில் முதல் பெண் பிரதமரான டகாய்ச்சி
வானவில் எதிர்ப்பு, feminism எதிர்ப்பு, immigration எதிர்ப்பென தீவிர வலதுசாரியானவர் தற்போது தேர்வானார் Sanae Takaichi ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பான் பார்லிமெண்ட்டில் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சனேனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார். ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தததால் பிரதமர் ஷிகெரு இஷிபா அவரது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (வயது 64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஜப்பான் பார்லிமெண்ட்டில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கீழவையில் நடைபெற்றதில் மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் ஓட்டெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104 வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.
ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றார். ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மாடலாக கொண்டவர். இந்த நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் "இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு நமது ஆழமான உறவுகள் இன்றியமையாதவை." ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பனிஸ் மொழியிலும் இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.






கருத்துகள்