பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 காவல் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதுகாப்புப் ஈடுபட்டனர்
காவல் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணி செய்துவரும் கலைவாணி (வயது 41) பணிக்கு வந்துள்ளார்.துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தலைமைக் காவலர் கலைவாணிக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிய நிலையில்.
இருமல் தொடர்ச்சியாக ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையடன் நல்லடக்கம் செய்ய உள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு வந்த இடத்தில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலரிடையேயும் மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது

கருத்துகள்