முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

BMW கார் வாங்க லோக்பால் முடிவு விவாதமான மூத்த வழக்கறிஞர் கருத்து!

 BMW கார் வாங்க லோக்பால் அமைப்பு விலைப்புள்ளி கோரிய நிலையில் விவாதமான மூத்த வழக்கறிஞர் கருத்து!

நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள், நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசு உயர் பணியில் உள்ளோர் அதிகாரம் மிக்க அலுவலர்கள் உள்ளிட்வர்கள் மீதான லஞ்சம் வாங்கி ஊழல் செய்து முறைகேடாக சொத்துக்களைக் குவித்த புகார்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் மத்திய லோக்பால் அமைப்பு மாநில அளவில் லோக் ஆயுக்தா எனப்படுவதும், 




2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அண்ணா ஹஷாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் என பல சமூக நலன் சார்ந்த நல்லிணக்கம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய  போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. டெல்லியின் ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதை அடுத்துத் தான் இந்தியாவில் ஊழலைத் தடுப்பதற்கான லோக்பால் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.





அதன் மூலம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பிரதமர்,முன்னாள் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும் . இதன் தலைவராக நீதிபதி அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் செயல்படுகிறார். அவருக்கு கீழ் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர்.இந்த நிலையில் இந்த ஏழு பேரின் பயன்பாட்டுக்காகவும் உயர் ரக BMW கார்களை வாங்குவதற்கு லோக்பால் அமைப்பு அதிகாரப்பூர்வமான டென்டரைக் கோரியது. தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.



 7 உயர் ரக BMW 3 Series Li Cars வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் ஸ்போர்ட் ரக கார்கள் தான் தேவை என அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாடல் காரின் விலை இந்தியாவில் சுமார் 70 லட்சம் ரூபாய். லோக்பால் அமைப்பு ஏழு கார்களை வாங்குவதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிதாக வாங்கக்கூடிய கார்களை டெல்லியின் வசந்த் கஞ்சி பகுதியிலுள்ள அலுவலகத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டுமென அந்த



டெண்டரில் கூறப்பட்டிருக்கிறது. கார் வாங்கிய பின்னர் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அந்தக் காரை இயக்குவது தொடர்பான பயிற்சியை BMW நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அந்த டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது . தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இது மாறி இருக்கிறது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் ஸ்போர்ட் ரக கார்கள் தான் தேவை எனக் அதில் குறிப்பிட்டுள்ளனர்.    


சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன்  அவரது எக்ஸ் தளத்தில், "பல ஆண்டுகளாக இந்த அமைப்பு காலியாக இருந்தது பின்னர் புதிதாக உறுப்பினர்களை நியமனம் செய்தார்கள், தற்போது அவர்கள் தங்களுக்கென 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW காரர்களை வாங்குகிறார்கள்"எனக்  குறிப்பிடடடுள்ளார்.  மேலும்.காங்கிரஸ் கடசியின் செய்தித் தொடர்பாளர் சமா முஹம்மத் தனது பதிவில் லோக்பால் அமைப்பு ஏழு ஆடம்பர BMW காரர்களை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருக்கிறது, இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராட எனக் கூறி எதிர் கட்சி ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது  தான் ஊழலுக்கு எதிரான இந்த இந்திய இயக்கம் என விமர்சித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்கும் நபர்களை அதிகாரிகளாகக் கொண்ட அமைப்பாக லோக்பால் மாறிவிட்டது என்றும் அதில் சாடியுள்ளார். இலஞ்சம் ஊழல் ஒழிப்புக்காக வந்த அமைப்பு தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சமூக சேவகர் அண்ணா ஹஷாரே  போராட்டம் முடிவில் தான் அது புது வடிவில் அமைந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு முதல் ஊழல் ஒழிந்ததா? அல்லது லஞ்சம் தான் குறைந்ததா?. இல்லை சாமானியன் அனுக முடியாத ஒரு துறை போலவே இந்த அந்த அமைப்புகள் செயல் படுகிறது, சாமானிய மக்கள் பயமின்றி எளிதாக அனுகும் நிலை வராத வரை இலஞ்சம், ஊழல் தடுக்க முடியாது என்பதே உண்மை. இதில் பயணிக்கும் காரும் BMW எனில் சாமானியன் பார்வையில் அந்த அமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கும் என்பதே நிதர்சனம். தங்களை பாதுகாக்கும் நேர்மையான எளிமையான அதாவது பிரதமர் கூறிய சுதேசி அமைப்பு தான் நம் பாரத நாட்டின் தற்போதய தேவை, அயல் நாட்டு விதேசி BMW அல்ல, ஊழல் வாதிகளுக்கு குடைபிடிக்க அல்ல என்ற நிலை வரவேண்டும் என்பதற்காக பகலவாடி குருநாதன் போல் பலரும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து நீதிக்காகப் போராடி காத்திருக்க வைப்பதல்ல இந்த ஊழல் ஒழிப்பு அமைப்புகளின் பணி,  இலஞ்சம் என்பதன் தூய தமிழ்ச் சொல் ‘கையூட்டு‘ எனப் பயன்படுத்தும் மக்கள்.

1910-ஆம் ஆண்டில் கோபிநாத் ராவின் ‘சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்‘ புத்தகத்தில் முதலில் வந்தது. இலஞ்சம், சோழர்கள் காலத்திலிருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நூலாசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas‘ ல் காணலாம் சோழர்கள் காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படிகள் கொடுத்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள், அல்லது பட்டத்து யானையால் மிதிக்கவிட்டிருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோவிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதுமென கொலைக்குற்றங்கள் கூட மன்னிக்கப்பட்டிருக்கின்றன.  அது மன்னர் ஆட்சிக் காலம்  நீதிமானும் அவரே நிதியும் நிர்வாகமும் மன்னர் தான் எதிர்ப்போரே இல்லாத காலமது,  இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைக் காணலாம்.

இப்போதெல்லாம் ‘இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஊழல் லஞ்ச லாவண்ய வழக்கில் ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள்.  நிமிர்ந்து நில் திரைப்படக் கதை போல 

கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து  உள்ளதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் இலஞ்சம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆங்கிலேயர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப், ராஜாசர் போன்ற பட்டங் கள் எல்லாம், இந்தியா வுக்கு சுதந்திரம் வேண்டாமெனக் கூறியதன் மற்றும் சுதந்திரம் கொடுப்பதில் பின்னணியும் இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கும், அடக்குவதற்கும் லஞ்சம் அப்போது பயன்பட்டது எனலாம். சிரஸ்தார், தாசில்தார், மேஜர்ட்,  போன்றவர்களின் லஞ்சங்களை ஆங்கில வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் ‘சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு‘ என்பதுதான் அப்போதே பொது வழக்காகவும் இருந்தது.

லஞ்சம் மொழியால் தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராய்ச்சிகள் செய்யலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அலுவலர்கள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. ‘வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்‘ என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்…  எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள். மேற்கண்ட வரையறையிலுள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு தான் லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காகவே இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அலுவலர்களை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள். சிவாஜி திரைப்படக் காட்சி போல 

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி எனும் தடையின்மைச் சான்றிதழ் கொடுக்கவோ, ஒரு பிறப்புச் சான்றிதழ் கொடுக்கவோ, ஒரு கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்றொரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாகவே இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

ஆனால் தவறு.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்றொருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள்.  உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத ராமசாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு ‘ஸாஷே‘ (sachet)அளவு பாவம்தான். இரயில்வே புக்கிங் அலுவலகத்தில் நாற்பது பேர் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்த பின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக் கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார் பாருங்கள் இதை மற்ற நபர்கள் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு ரத்த அழுத்த நோய் உள்ள நபர் மட்டுமே லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் இந்திய தேசியக் குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், ‘நமக்கேன் வம்பு‘ என்றும் விட்டுவிடுவார்கள். அதுவே சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அலுவலருக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு மது அருந்துவதற்கோ, அவர் மகனின் காப்பிட்டேஷனுக்கோ, மனைவியின் நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில் தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள்  பர்த் , மற்றும் டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அலுவலர்களின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.

கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள்  தரக்குறைவான பாலத்துக்கு ஆய்வுச் சான்றிதழ் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, அரசு நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.  முதல் வகையான ‘பெட்டி கரப்ஷன்‘ (petty corruption) என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரங்கள் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் இரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது. ஆனால் அதிலும் சூட்சுமமாக லஞ்சம் கைமாறுகிறது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அலுவலர்களும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். ‘ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன்மெண்ட் ‘ (transparent government) என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப படிவங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம் தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. ‘தெஹல்கா‘(Tehelka) போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அலுவலர்கள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள் தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அலுவலர்  ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை எனில், தவறாமல் நீதிமன்றத்திற்கு போக வேண்டும். 

டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக அது 91 வயதில்! கூட 

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றும் மக்கள் சுத்தமாக இருந்தால் அலுவலர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ  மன்னர் காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும்.  அதற்கும் ஒரு ரமணா திரைப்படம் போல அது மக்கள் ஜனநாயக நாட்டில் சாத்தயமில்லை, அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்?

அந்நியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:

"அஞ்சு பைசா லஞ்சம் வாங்குறது தப்பா?"

"தப்பு இல்லைங்க "

"அஞ்சு லட்சம் பேரு, அஞ்சு லட்சம் தடவை அஞ்சு பைசா லஞ்சம் வாங்கினா...?"

"தப்பு மாதிரி தான் தெரியுது,"

"அதுதாண்டா நடக்குது இங்க." எனும் 

இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி எழுத்தாளர் சுஜாதா கருத்து:  "ஏங்க, உலகத்துல என்னவோ யாருமே லஞ்சம் வாங்காத மாதிரி சொல்றீங்களே, இந்தியாவுல மட்டும் தான் லஞ்சம் வாங்குறாங்களா என்ன?"

"லஞ்சம் உலகம் பூரா இருக்குடா, என்ன, மத்த நாடுகள்ல கடமையை மீறத்தாண்டா லஞ்சம், இங்க, கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குறீங்க." எனும் வசனம் எதிரொலி எங்கும் கேட்கிறதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...