பாரதமாதா உருவம் கொண்ட RSS நூற்றாண்டு தபால் தலை, நாணயம் வெளியீடு
டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் RSS நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
தேசத்திற்கு RSS-ன் பங்களிப்புகளை சிறப்பிக்கும் வகையில் தபால்தலை, நாணயம் வெளியீடு
RSS நூற்றாண்டு தபால்தலை, நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்இந்திய நினைவு நாணயம் குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாணயங்கள் . இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் முன்னால் பிரதமர் ஜவகர்லால் நேரு படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக ரூபாய் 1000 மதிப்புடைய நாணயம் தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோவில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது. தற்போது ராஷ்டிரீய ஸ்வயம் சங்கம் 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டது. பாரத மாதா இந்தியாவைத் தாயின் வடிவமாக உருவகப்படுத்தும் கருத்தாக்கம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் உருவானது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் "ஆனந்தமத்" நாவலில் "வந்தே மாதரம்" பாடலில் முதன்முதலில் ஒரு உருவமாக முன்வைக்கப்பட்டது. இது தேசியவாதத்தின் குறியீடாகவும், தாய்நாட்டைப் போற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக இது பயன்படுத்தப்பட்டது.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா: இந்தி சுதந்திரப் போராட்டத்தின் போது, பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா தனது "ஆனந்தமத்" நாவலில் பாரத மாதாவை வழிபட அழைப்பு விடுத்து, "வந்தே மாதரம்" கீதத்தை தேசிய கீதமாக வழங்கினார்.
மதச்சார்பற்ற மற்றும் தேசியவாதம்: பாரத மாதாவின் கருத்து சுதந்திரத்தின் முன் வந்தாலும், இது ஹிந்து மத தேசியவாதத்துடன் இணைந்தது. இது இந்திய மதச்சார்பற்ற குடியரசில் ஆரியவர்த்தா அல்லது இந்து மதத்தின் தாய்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
தாயின் உருவம்: தேசத்தை கற்பனை செய்வதற்கான உலகளாவிய மற்றும் சக்திவாய்ந்த அடையாளமாக தாயின் உருவம் செயல்பட்டது.
துர்க்கையின் வடிவம்: இந்திய பண்பாட்டின் பெண் கடவுளர்களின் பல குணங்களை ஒன்றிணைத்து, குறிப்பாக துர்க்கையின் வடிவத்தை ஒத்து உருவாக்கப்பட்டது.
இந்திய தேசியக் கொடி: காவி நிற அல்லது மூவண்ண புடவை அணிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு சித்தரிக்கப்படுகிறது1936 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட பாரத மாதா கோவில் உள்ளது. 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட பாரத மாதா கோவில் ஹரித்வாரில் உள்ளது.
வாரணாசியிலும் பாரத மாதா கோவில் உள்ளது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில், பாரத மாதாவின் உருவம் பதித்த நாணயம் வெளியிடுவது குறித்து பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பெருமிதம். என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்