தெரு நாய் விவகாரம் தொடபாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட அமர்வு வழக்கை எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்த நிலையில் விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதில், "தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும். கடந்த ஜூன்,மற்றும் ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கபட்டுள்ளதெனவும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுவதாகவம். மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன எனவும், நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சியும் தரப்பட்டுள்ளதெனவும் இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன" என தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்