யுனெஸ்கோவின் சுவையான உணவுக் கலையின் படைப்பாற்றல் மிக்க நகரமாக லக்னோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிக்க சுவையான உணவுப் பழக்கவழக்கம் கொண்ட நகரமாக லக்னோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ ஒரு வளமான கலாச்சாரம் கொண்ட நகரமாக இருப்பதுடன், இந்நகரின் மையமாக அதன் வளமான சமையல் பாரம்பரியம் உள்ளது என்று பிரதமர் கூறினார்.
யுனெஸ்கோவின் அங்கீகாரம் இந்நகரத்தின் தனித்துவமான அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் லக்னோவிற்குச் சென்று அதன் தனித்துவம் வாய்ந்த சிறப்பை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சி குறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவிற்கு பதிலளித்துள்ள திரு மோடி, இதனைத் தெரிவித்துள்ளார்.
“லக்னோ ஒரு வளமான கலாச்சாரம் கொண்ட நகராக இருப்பதுடன், அதன் மையத்தில் ஒரு சிறந்த சமையல் கலாச்சாரம் உள்ளது. லக்னோவின் இந்த தனித்துவ அம்சத்தை யுனெஸ்கோ அங்கீகரித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் லக்னோவிற்குச் சென்று அதன் தனித்துவ உணவின் சுவையை கண்டறிய வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.”

கருத்துகள்