கோயம்பத்தூர் விமான நிலையமருகே நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் கோயம்பத்தூர் மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது..:-
நேற்று முன்தினம் இரவு கோயமுத்தூர் விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
அவர்களைக் கைது செய்ய முயன்ற போது, காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது.
பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர் தவசி (20) என தெரியவந்தது. மூவரும் 10 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருகூரில் தங்கி கட்டடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்கள் மீது முன்னதாகவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அண்மையில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் நடந்த இரவு மூவரும் இருகூரில் மது அருந்திய பின்னர் மீண்டும் மது வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் நண்பரை அரிவால் போன்ற ஆயுதத்தால் தாக்கி, காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.
போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.
இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், திட்டமிட்டு தாக்கியதல்ல எனவும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.கோயம்பத்தூர் காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்த போது
கோயம்பத்தூர் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணா (வயது 30), சதீஷ் (வயது 20), கார்த்திக் (வயது 21) ஆகிய 3 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்டுபிடிச்சி சுட்டுப் பிடித்துள்ளோம்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன,
மது போதையில் திருட்டு வாகனத்தில் சென்று இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்
சுமார் 300 சிசிடிவி கணீகாணிப்புக் கேமரா ஆதாரங்களைக் கொண்டு தப்பிச் சென்றவர்களைப் பிடித்துள்ளோம். கைது செய்யப்பட்ட மூவரில் சதீஷ் மற்றும் கார்த்தி இருவரும் சகோதரர்கள். குணா அவனது உறவினர் ஆகவே மூன்று குற்றவாளிகள் கைது. கோயம்புத்தூர் பாலியல் கொடுமைக் குற்றம் விவகாரத்தில் அரசின் மீது எவ்வளவு தவறு இருப்பதாகக் கூறுவதை விட அதிகமாகவே அந்தப் பெண் மீதும் தவறு உள்ளது சந்தித்த இடம் பாத்தால் புரியும் நேரம் இரவு 11 மணிக்கு அவங்க சந்திச்சு பேசின இடம்.
இங்கெல்லாம் வந்து காவல் பாதுகாப்பு தர முடியுமா? என்பது வாசகர்கள் பார்வைக்கு.





கருத்துகள்