மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் 1,040 ஆவது சதய விழாவை முன்னிட்டு, மன்னர் சிலைக்கு மரியாதை
அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் எனும் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை பிறந்த துலாம் மாதமெனும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழ்வாண்டு ஸ்ரீ ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா பெரிய கோவிலில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன், நடன நாட்டிய நிகழ்வுகளுடன் வெள்ளிக்கிழமை காலை துவங்கியது. பின்னா், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ராமச்சந்திரன் துவக்கவுரையாற்றினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் மராட்டிய சரபோஜி வழி வந்த. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறையில் இணை ஆணையா் மு. ஜோதிலட்சுமி, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. இராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, பெரிய கோவிலுக்கு வந்தனா். பின்னா், ஏறத்தாழ 400 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து இரண்டாம் நாளான சனிக்கிழமை சதய நட்சத்திர நாளான நவம்பா் மாதம் 1 ஆம் தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் ஸ்ரீ ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோவிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முரசொலி, மேயர் இராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் திருமுறை வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஈசன் பெருவுடையார் மஞ்சள் சந்தனம், பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள் சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் சிறப்புரையாற்றினார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் விருதுகள் வழங்கி அருளுரையாற்றினார். தொடா்ந்து பட்டிமன்றம், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சிள் நடைபெற்றன.
இதையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது
தஞ்சாவூர் பெருவுடையார், ஸ்ரீ ராஜராஜ சோழன்; பேசும் சித்திரங்கள் - சதய விழாவில் சிலிர்க்க வைத்த ஓவியங்கள்
ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. 40 மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஸ்ரீ ராஜராஜ சோழனின் வாழ்வியல் ஓவியங்கள் காண்போரை சிலிர்க்க வைத்தன.





















.jpg)

கருத்துகள்