மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் வருடாந்தரக் கூட்டம்
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் வருடாந்தரக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு இந்தியாவிற்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனெர் இணைத்தலைவராக இருந்தார். நார்வே – இந்தியா கூட்டாண்மை முன்முயற்சியின் செயல்முன்னேற்ற அறிக்கை 2025-ஐ ஆய்வு செய்வதும் ஏற்பளிப்பதும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா, இணக்கமான முயற்சிகள் எவ்வாறு பயன்களை விளைவிக்கின்றன என்பதை நார்வே - இந்தியா கூட்டாண்மை முன்முயற்சி எடுத்துக்காட்டுவதாக கூறினார். விரும்பும் விளைவுகளை ஏற்படுத்த முழுமையான அரசு அணுகுமுறை மூலம் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.



கருத்துகள்