கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம். கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைத்து கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம். விசாரணை.
கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தநிலையில் நண்பரைத் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர்.
தனியார் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் சட்டம் படித்து வருகிறார். கோயமுத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார், இவரும் அந்த மாணவியும் நண்பர்கள்.
இந்த நிலையில், அந்த இளைஞரும் மாணவியும் நேற்று முன்தினம் நவம்பர்.2 ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்தனர். தொடர்ந்து, கண்ணாடி வழியாகவே கதவைத் திறந்து, காருக்குள் இருந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார் . தொடர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக மூன்று பேர் கும்பல் வெளியே இழுத்தனர். கார் அருகே உள்ள ஒரு புதர் பகுதி அருகே அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அதிகாலை சுயநினைவு திரும்பிய அந்த இளைஞர் கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். காவலரும் அந்த இளைஞரும் அந்த இளம்பெண்ணை தேடினர்
.அப்பொழுது அருகே உள்ள புதர்ச் செடி அருகே உடலில் ஆடைகளின்றி இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது . இத் தகவல் அறிந்த மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர், துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க துணை ஆணையர் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் தீவிரமாக பல கோணங்களில் விசாரிணையை நடத்துகின்றனர்.19 வயது சட்டக் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நவம்பர் மாதம்., 3 ஆம் தேதி மாலை கோயமுத்தூரிலும், நாளை மறுதினம் பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுக தற்காலிகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கோயம்பத்தூர் விமான நிலையம் பின்புறம் 19 வயது முதலாம் ஆண்டு படிக்கிற பெண், அவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, 3 பேர் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கோயமுத்தூரில் மாணவிக்கு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது, எல்லா பெற்றோர்களையும் கண்கலங்க வைப்பதோடு, பதைபதைக்கவும் வைக்கிறது. இதனைக் கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று மாலை கோயம்பத்தூரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான இண்டி திமுக கூட்டணியை கண்டிக்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார். நாளை மறுதினம் பிற மாவட்டங்களிலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும், பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.எல்லா விஷயங்களிலும் நாங்கள் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாகவும் இருப்போம். என்றார்.















கருத்துகள்