காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் திருமாவளவன் போன்றோர் தலையிட கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கருத்து
காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் விசிகட்சி, மதிமுக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் தலையிட வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவரது வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தார். திருமாவளவன், வைகோ, உள்ளிட்டோர் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டுமெனவும் பதிவு,
சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராகுல் காந்தியின் நண்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்தார். அதனால் மாநிலத்தில் திமுக தலைமையிலான இன்டிக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிவிடும் நிலை உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசை விமர்சித்தார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் கடன் அளவு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு விமர்சனத்தைப் பதிவிடவே, அது தமிழ்நாடு அரசியலில் விவாதப் பொருளாகவே மாறியது.2026 சட்டசபைத் தேர்தலுக்கு சரியாக மூன்று மாதங்களே உள்ள சூழலில், திமுகவுக்கு அது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
திமுக மற்றும் அதன் இன்டிக் கூட்டணி கட்சிகள் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சி நடாளுமன்ற உறுப்பினர்களும் பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்தனர். இந்த நிலையில் கூட்டணியிலுள்ள விசிகட்சி, மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினரும், ராகுலின் தனிப்பட்ட காரியதர்சியாகவும் பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்தார்.
அதில், விசிகட்சி, மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அது ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் கட்சி தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டுமென்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது?
தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொதுக் கருத்துக்களை இந்தக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை
விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியின் பெ. சண்முகம், மற்றும் வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதைச் சகிப்பார்களா?
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன. பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலமல்ல; கூட்டணிக் கட்சி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணிக் கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
இது பாஜக மற்றும் RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வைத் தூண்டும். சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) தேசியத் தலைமைகள் தங்களது மாநிலச் செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், அண்ணன் வைகோ மற்றும் திருமாவளவன் போன்ற கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மணன் ரேகை"யை மதிக்குமாறு தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனமல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும், பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அல்ல எனப் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதி வரை தருவதாக பலகட்டப் பேச்சுக்கு பின் ராகுலுக்கு உறுதியளித்த நடிகரும், தவெக தலைவருமான விஜய் கூறிய தகவல் வரும் நிலையில் திமுகவிடம் இறுதியில் 41 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணி எனக் கராராக கூறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத் திமுக தலைவர் கனிமொழி நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் நடந்த பீஹார் மாநில சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது, அதனால் செல்வாக்கை இழந்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கு ஓங்கியுள்ளது, இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் வரவிருக்கும் மேற்கு வங்காளம், மற்றும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் திரினாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு சேர்க்காது, மேலும் அங்கே திரினாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையில் தான் போட்டி நிலவுகிறது காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத் தேர்தல் களத்திலேயே இல்லை.
இப்படி ஒரு சூழலில் மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இம்முறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் உறுதி படுத்துகிறது. அந்த வகையில் வரும் தேர்தலில் மேற்கு வங்கத்திலும் படுதோல்வியடைந்து தமிழ்நாடு திமுக கொடுக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி சிறிய கட்சியாகும் நிலை வரும் என உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை.
மேற்கு வங்காளத் தேர்தலில் படுதோல்வியைத் தடுக்க முடியாது, ஆனால் தமிழ்நாட்டில் திமுக கொடுக்கும் 25 தொகுதியை மட்டுமே வாங்கிக் கொண்டு போட்டியிடுவதை விட நடிகர் விஜயுடன் கூட்டணி அமைத்தால் அதிக தொகுதியில் போட்டியிடலாம், அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்கலாம் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியில் 40 தொகுதியில் போட்டியிட்டால், அதற்குக் கீழே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதையாக இருக்காது என உணர்ந்த காங்கிரஸ் கட்சித்தலைமை
வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 தொகுதியை மீண்டும் திமுக கொடுத்தால் கூட்டணியில் தொடரலாம், இல்லை என்றால் நடிகர் விஜயின் தவெக பக்கம் செல்வதில் உறுதியகவே உள்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை.
மேலும் ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் , நாடாளுமன்ற உறுப்பினர் பிரவின் சக்கரவர்த்தி உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவர்களில் பலரும், தவெக கூட்டணியைத் தான் விரும்புகின்றனர். இதைத்தான் காங்கிரஸ் கட்சி மேலிடத் தலைவர்களின் விருப்பத்துடன், அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வுப் பிரிவு தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் சக்கரவர்த்தி, 2025 டிசம்பர் 5 ஆம் தேதி நடிகர் விஜயை சென்னை, பனையூரில் வந்து சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு திமுகவின் தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது.
இதைத் தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கனிமொழி மூலம் நடிகர் விஜய் கட்சியின் பக்கம் காங்கிரஸ் கட்சியை செல்லவிடாமல் தடுக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றும் ராகுல் காந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார், ஆனால் அதற்கு சோனியா மற்றும் ராகுல் தரப்பு எங்களுக்கு 60 தொகுதி வரை நடிகர் விஜய் ஒதுக்கித் தருகிறார் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிறார். ஆகையால் 41 தொகுதிக்குக் குறைவில்லாமல் கொடுத்தால் திமுகவின் கூட்டணியில் தொடர்கிறோம் , இல்லை என்றால் கை கொடுத்து நட்போடு பிரிக்கிறோம் என கனிமொழிக்கு பதிலளித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் சோனியா தரப்பு என்கிறது டெல்லி அரசியல் வட்டாரங்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ராகுல் - நடிகர் விஜய் இடையில் நடந்த தொலைபேசி வாயிலான உரையாடலில், காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளும் மற்றும் ஆட்சியில் பங்கு தருவதாக விஜய் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே ஜனவரி 13 ஆம் தேதி முடிவாகும். அல்லது காங்கிரஸ் கட்சி திமுக தரப்பில் அதிக இடங்களைப் பெற தவெக தரப்பில் பேசி திமுகவை அச்சுறுத்தி பார்க்கிறதா என்பதே பலரது தரப்பும் தரும் தகவல், ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியுடன் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் பேசிய போது தவெகவுடன் கூட்டணி உறுதி என்பதை தலைமை விரைவில் அறிவிக்கும் அதுவே காங்கிரஸ் கட்சி வளர்சிக்கு உதவும்" என்றார் காங்கிரஸ் கட்சித் தொணடர்கள் மனநிலையும் அதுவே.








கருத்துகள்