முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1240 பிறை கண்ட நாயகன் முன்னால் அமைச்சர் வி. வி. எஸ்

முன்னால் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் நூற்றாண்டு  பிறந்தநாள் விழா. வாழ்க நலமுடன் இன்னும் பல்லாண்டு வளமாய் நலமாய் 

இந்திய அரசியல் மீது பற்றுக்கொண்டவர், முன்னால் முதல்வர் எம் ஜிஆர் காலத்தில் புத்திசாலி அமைச்சர் என்றால் வி.வி.எஸ் இவரும் செ.மாதவன் ஆகிய இருவர் என மாபெரும் அரசியல் செய்தவர்.

அதிமுக அரசு கலைக்கப்பட்ட போது  அமைச்சர் வி. வி.சுவாமிநாதன் புவகிரியில் மக்கள் ஆதரவு பலமாக நின்று வெற்றிபெற்றார் 

சிதம்பரம் தொகுதியில் 1971 ஆம் ஆண்டிலும்,1984 ஆம் ஆண்டில் புவனகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்.

சிதம்பரம் சுற்றிய ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவக் கிராமங்களின் நலனுக்காக செயலாற்றியவர்.

சிதம்பரம் நகராட்சியின் முதல் திமுக நகராட்சித் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

ஒரே நேரத்தில் 14 துறைகளைக் கவனித்து சாதனை படைத்த அமைச்சர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மின்சாரம், அறநிலையத்துறை என பல துறைகளைக் கவனித்தவர்.

சிறந்த வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர்,  நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் முன்னாள் அமைச்சர் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.

சர்க்கரை ஆலை, கூட்டுறவு முகமை மற்றும் கம்பளம் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர். நாம் 2013 ஆம் ஆணடு  சென்னையில் துவங்கிய பப்ளிக் ஜஸ்டிஸ்  செய்தி இதழ் அச்சு புலனாய்வு ஊடகமாக மாதமிருமுறை வெளிவந்த நிலையில் இரணடாவது இதழில் அண்ணாரிடம் கடடுரை வாங்கச் சென்ற போது இன்முகத்துடன் உபசரித்தார், வாழ்த்தினார்  அவரது கடடுரை வெளிவந்த இதழ் நம் வாசகர்கள் பார்வைக்கு


வயதால் 100 ஐ கடந்த வி. வி.சுவாமிநாதன், அறிவார்ந்த தமிழர் பொதுவாக "தமிழ் மறுமலர்ச்சி" என்று அழைக்கப்படும் தமிழ் செம்மொழி மரபின் மறுகண்டுபிடிப்புக்குக் காரணமானவர், V.V. சுவாமிநாதன் அவர்களின்

100-வது பிறந்தநாள் நிறைவு பாராட்டு விழா  அவர் சார்ந்த பார்கவ உடையார் சமூகம் 100 ஆண்டு துவக்கத்தில் நடத்தியது 

: டாக்டர் T.P. கணேசன் கலையரங்கம் ,SRM பல்கலைக்கழக வளாகம், காட்டாங்குளத்தூரில்

வரவேற்று வாழ்த்துரை  வழங்கிய மூத்த வழக்கறிஞர். G. ராஜன் 

முன்னிலை வகித்த : பச்சைமுத்து உடையார்  எனும் டாக்டர் T.R. பாரிவேந்தர்

தலைமை :கலைமாமணி திரைபடத் தயாரிப்பாளர் கோவைத் தம்பி (Ex. M.L.A.)

சிறப்புரை : முன்னால் அமைச்சர்கள்  G.K. வாசன், M.P., C. பொன்னையன், டாக்டர் H.V. ஹண்டே  ஓய்வு பெற்ற நீதிபதி C.T. செல்வம், 

ஏற்புரை :விழா நாயகரும் தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நம்பிக்கை நாயகர் V.V. சுவாமிநாதன் தற்போது 101 வயதில் 

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி போன்ற உயர் கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டவர், தனது பேராற்றல், பக்தி, விடாமுயற்சி, மக்கள் பணி ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் அழியாத முத்திரையைப் பதித்தவர். தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த பற்று கொண்ட பெருமகனும் ஆவார்.

கருத்துகள்