டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 8, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.பிப்ரவரி மாதம் 1897 ஆம் ஆண்டு பிறந்தநாள் 3 மே 1969 ல் காலமானார் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை, குடியரசுத் தலைவர் பதவி வகித்தார். 1962-1967 காலத்தில், இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார் இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும், திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[ உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது, காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது, ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.


கருத்துகள்