முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புகையிலைப் பொருட்களின் மேல் அட்டையில் புதிய சுகாதார எச்சரிக்கை

புகையிலைப் பொருட்களின் மேல் அட்டையில் புதிய சுகாதார எச்சரிக்கை சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (அட்டைப் பெட்டியில் அடைத்தல் மற்றும் லேபிள் ஒட்டுதல்) விதிமுறைகள் 2008-ல் திருத்தங்கள் மேற்கொள்வதன் வாயிலாக அனைத்து வகையான புகையிலை பொருட்கள் மீது இடம்பெற வேண்டிய புதுவகையான சுகாதார எச்சரிக்கைகளை, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிமுறைகள்  01 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வரும்.  இதன்படி, ‘புகையிலை பயன்பாடு வலி மிகுந்த உயிரிழப்பை ஏற்படுத்தும்’ என்ற வாசகத்துடன் கூடிய படம்–1, அது நடைமுறைக்கு வரும் 01 டிசம்பர் 2022 முதல் 12 மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும்.      படம் – 1-ல் இடம்பெறும் சுகாதார எச்சரிக்கை முடிவடையும் நாளில் இருந்து ‘புகையிலை பயன்படுத்துவோர் சிறுவயதிலேயே உயிரிழக்க நேரிடும்’ என்ற வாசகத்துடன் கூடிய படம்-2 நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகள் மொத்தம் 19 மொழிகளில் www.mohfw.gov.in மற்றும் ntcp.nhp.gov.in  வலைதளங்களில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசின் தகவல் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

மத்திய அரசின் தகவல் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், பன்னிகுளம் கிராமத்தில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தகவல் தொடர்பு கள அலுவலகம் சார்பில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொ ண்டு சேர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் இன்று(28.07.22) நடைபெற்றது. இந்த முகாமை இந்தியன் வங்கியின்  சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் எஸ். புவனேஸ்வரி தொடங்கி வைத்து உரையாற்றினார்.  அவர் பேசும்போது "தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி முன்னோடி வங்கியாக செயல்பட்டு வருகிறது.  இந்தியன் வங்கி சார்பில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்த பயிற்சி மையத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர் முதல் அனைவருக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  பயிற்சிகள் முடித்தவர்களுக்கு சுய தொழில் தொடங்க மத்திய அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது.  இதை அனைவரும் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்."  இந்த விழிப்புணர்வு முகாமில...

ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியாக மின்துறையின் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை ஜூலை 30 அன்று பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார் திட்டத்தின் ஐந்து ஆண்டு ஒதுக்கீடு: ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக மின்சாரத்துறைகள் மற்றும் மின்விநியோக அமைப்புகளில் செயல்திறன்கள் மற்றும் நீடிக்கவல்ல நிதி மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த திட்டம் ‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார் ரூ.5200 கோடிக்கும் அதிகமதிப்புள்ள என்பிடிசியின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார் தேசிய மாடிப்பகுதி சூரியசக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார்  ஜூலை 30 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ‘ஒளிமயமான இந்தியா ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார். இந்த நிகழ்வில் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். தேசிய அனல்மின் கழகத்தின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தேசிய ம...

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து பொன் மாணிக்கவேல் மனு மீதான விசாரணை விரைவில் தீர்ப்பு

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியுமென சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு கேள்வி. சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டுமென பொன். மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குற்ற விசாரணை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி நாங்கள் விசாரிக்க முடியுமெனறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற தன்னை சிறப்பு அதிகாரியாக நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல், கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். முன்னால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல...

தமிழகத்தின் ஆன்மீகச் சதுரங்கமும் அரசியல் சதுரங்கமும்

தமிழகத்தின் ஆன்மீகச் சதுரங்கம்:- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பூவனூரிலிறங்கி பாமினி ஆற்றைக் கடந்து சிறிது சென்றால் பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103 ஆவது சிவ ஸ்தலமாகும். அப்பர் எனும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது, தேவாரப் பதிகத்தில் "ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே" எனப்  போற்றிப் பாடியுள்ளார். உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருப்பதிகக் கோவை மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆகியவற்றிலும் போற்றிக் கூறப்பட்டுள்ளது.  இதன் வரலாற்றில் ' மன்னர் வசுசேனன் மகள் அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கண்டு மணந்ததால் இந்த ஸ்தலத்தில் இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் எனவும் இறைவன் ஈசன் திருவிளையாடல் சித்தராய் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவனென்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு கூற. இறைவன் எம்பெருமான் ஈசன் இராணி ராஜேஸ்வரியுடன் சதுரங்கமாடி.  ...

மொசாம்பிக் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

மொசாம்பிக் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு   மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் திருமதி எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர், இன்று (29.07.2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினர்.    வெளிநாட்டு தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 25 ஆம் தேதி தாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் சர்வதேச தூதுக்குழுவினராக மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.  இருநாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பரஸ்பர பயணங்களுடன், இந்தியாவும், மொசாம்பிக்கும் நெருங்கிய நட்புறவை கொண்ட நாடுகளாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.      இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், முக்கிய கூட்டாளியாக மொசாம்பிக் உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மொசாம்பிக் நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் சு...

மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் முதலாவது அகில இந்திய கூட்டம்

மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் முதலாவது அகில இந்திய கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் 30 ஜூலை அன்று உரையாற்றுகிறார் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (30 ஜூலை 2022) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.  மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதலாவது கூட்டத்தை 30-31 ஜூலை 2022-ல் விஞ்ஞான் பவனில் நடத்த, தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்திசைவை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடைமுறைகளை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.      நாட்டில் மொத்தம் 676 மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்த ஆணையங்களின் தலைவராக மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனர்.  மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணையங்கள் வாயிலாக, பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேசிய சட்டப்பணிகள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.  தேசிய சட்டப...