முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தின் ஆன்மீகச் சதுரங்கமும் அரசியல் சதுரங்கமும்

தமிழகத்தின் ஆன்மீகச் சதுரங்கம்:-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பூவனூரிலிறங்கி பாமினி ஆற்றைக் கடந்து சிறிது சென்றால் பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103 ஆவது சிவ ஸ்தலமாகும். அப்பர் எனும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது, தேவாரப் பதிகத்தில் "ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே" எனப்  போற்றிப் பாடியுள்ளார். உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருப்பதிகக் கோவை மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆகியவற்றிலும் போற்றிக் கூறப்பட்டுள்ளது. 

இதன் வரலாற்றில் ' மன்னர் வசுசேனன் மகள் அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கண்டு மணந்ததால் இந்த ஸ்தலத்தில் இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் எனவும் இறைவன் ஈசன் திருவிளையாடல் சித்தராய் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவனென்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு கூற. இறைவன் எம்பெருமான் ஈசன் இராணி ராஜேஸ்வரியுடன் சதுரங்கமாடி.  இறைவன் வென்றார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணம் முடித்தார்.

இங்கு இறைவன் சதுரங்க வல்லபநாதர் எனவும் இறைவி சாமுண்டீசுவரியாகும். பூவனூர் புனிதன் சதுரங்கம் விளையாடிய புராண நிகழ்வினை அப்பர் சுவாமிகள் அரி அயன் தலை வெட்டி வட்டாடினார் அரிஅயன் தொழுதேத்தும் அரும்பொருள் பெரியவன் சிராப்பள்ளியைப் பேணுவார் அரிஅயன் தொழ அங்கு இருப்பார்களே "என காட்டுகின்றார். இப்புராண நிகழ்வுகளை பாரத பிரதமர் மறவாது நினைவு கூறியது சிறப்பு அப்பர் சுவாமிகளின் பாடலையும் சதுரங்கம் விளையாடும் விளையாட்டு வீரர்கள் பாராயணம் செய்யவும் இவ்விளையாட்டு புராண நிகழ்வு நடந்த இப்பாடல்பெற்ற தமிழகத்தில் நடைபெற அனைத்து ஏற்பாடும் செய்த தமிழக முதல்வருக்கும் பங்கேற்கும்அனைத்து நாட்டு வீரர்களுக்கும் நமது நல்லாசிகள். என திருவாடுதுறை ஆதீனம்   ஆசியுரைதமிழகத்தின் அரசியல் சதுரங்கம்:- எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்த பிரதமர் நரேந்திர மோடி; தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி.! என நிர்வாகிகளுக்கு உத்தரவு: காரணமாக       அதிமுக தலைவர்கள் வேண்டுமானால் அதிர்ச்சி ஆகலாம் ஆனால் நமக்கு இது முன்னரே தெரிந்த நிலையில்  

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்துப் பேச விரும்பிய எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுத்ததோடு, தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி மாநில நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த காரணமாக அதிமுகவில் தலைமைப் பதவியைப் பிடிப்பதில் எடப்பாடி  கே. பழனிச்சாமிக்கும்,


ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே  மோதல் ஏற்பட்டது இவர்கள் செய்த ஊழல் காரணமாக இதை வெளியே சொல்ல முடியாத நிலை இதனால் கட்சி இரண்டாக உடைந்தது. நிர்வாகிகள் பெரும்பான்மையோர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பக்கமும், தொண்டர்கள் பெரும்பான்மையானோர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமுமிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதனால் அதிமுகவில், சின்னம், கொடி ஆகியவற்றுக்கு வீரியம் கொண்ட தலைமை இல்லாத காரணத்தால் இருவரும் போட்டி போடுகின்றனர். உண்மை புரியாத தொண்டர்கள் செய்வதறியாது தடுமாற்றம் காரணமாக அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் வந்து விட மாட்டார்களா என்று குளக்கரை கொக்கு நிலையில் காத்திருக்க இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளதனால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருக்கும் காரணமாக பிரதமரின் ஆதரவிருந்தால் கட்சியை தங்களது சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று ஊழல் செய்து சிக்கியிருக்கும் இருவரும் அடிபணிய அவரவர் ஆதரவினரும் அவர்களுடன் போராடி வருகின்றனர்.

இந்த அரசியல் மோதலுக்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வேட்பு மனுத் தாக்கலுக்காக சில நாட்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். அதனால் பிரதமர் நரேந்திர மோடி தனக்குத்தான் ஆதரவாக உள்ளாரென வெளியில் கூறி வந்தார். இதனால், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழாவுக்கு அதிமுக சார்பில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்று பரவிய பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக டெல்லி  சென்றவர் தனது நெருக்கமான ஆதரவாளரான எஸ்.பி.வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோரை மட்டுமே உடன் கூட்டிச் சென்றனர்.



கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை. இந்த நிலையில், டெல்லியில்  ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை இருந்த இடத்துக்கே வந்தார். அப்போது, இருவருக்கும் வணக்கம் தெரிவித்த பின்னர், அண்ணாமலையிடம் மட்டும் அதிக நேரம் பேசியபடி புறப்பட்டுச் சென்றார். அப்போது       ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம்  கொடுத்தார். ஆனால் அதை வாங்காதவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டதனால்   அதிர்ச்சியடைந்தார். முதல்வராக இருந்த போது தனக்கு முக்கியத்துவமளித்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது கண்டுகொள்ளவில்லையே என தனது ஆதரவாளர்களிடம் புலம்பித் தீர்த்தவர் அதே நேரத்தில் அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழகத்தின் பா ஜ க தலைவர் அண்ணாமலை மூலமாக நேரம் கேட்டார். ஆனால் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் காரணமாக  அண்ணாமலையும் எடப்பாடி கே. பழனிச்சாமியின் தொடர்பிலில்லை. இதனால்  கோபமும் ஏமாற்றமுமடைந்தவர் தனது பயணத்தை பாதியிலேயே இரத்து செய்து விட்டு சென்னைக்குத் திரும்பிய நிலையில் சென்னையில் சர்வதேச செஸ் போட்டியை துவங்கி வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கேட்டு எடப்பாடி கே. பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டனர். அவர்கள் அரசியல் சதுரங்க விளையாட்டு அங்கு எடுபடவில்லை ஆனால் வரவேற்பு கொடுக்க எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பிரித்து அனுமதி வழங்கி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதனால் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி கே‌பழனிச்சாமி விமான நிலையத்தில் வரவேற்றார். வழியனுப்ப அவர் அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் அவர் பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பி வைக்க மட்டும் விமான நிலையம் வந்தார். அதேநேரத்தில் முனனிரவு ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி கே.பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டனர். ஆனால் இருவரையும் சந்திக்க மறுத்து விட்ட நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழகத்தின் தற்போது அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர். தமிழகத்தில் அதிமுக தற்போது நான்காக உடைந்து விட்டது.




தொண்டர்கள் சரிசமமாகப் பிரிந்து விட்டனர். இனி அதிமுகவை நம்பி நமக்கு பலனில்லை. தமிழகத்தில் பாஜக தற்போது வளர்ந்து வருகிறது. அதற்குப் பாராட்டுக்கள். அதனால் இனி மேல் பாஜக வின் தலைமையில் தான் கூட்டணி அமையும். வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதற்கான பணிகளைத் தொடங்குங்கள். தமிழகத்தில் வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இனி வளர்ச்சிதான் முக்கியமென்று எடுத்துக் கூறினார். அதேநேரத்தில், பாஜகவினருக்கிடையே உள்ள மோதலை பெரிதாக்காமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பணிகளைச் செய்ய வேண்டுமென்று மறைமுகமாக ஆலோசனைகளை வழங்கி அனுப்பி வைத்ததாக பாஜகவின் நம்பத்தகுந்த  வட்டாரங்கள் தெரிவித்தன.   இந்த நிலையில் மேலும் 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்?  உள்ளன சமரசமாகச் செல்ல வாய்ப்புகள். உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர் செல்வத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலையே தொடருமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  அஇஅதிமுக விலிருந்து 


ஓ.பன்னீர் செல்லம் நீக்கம் தடை கோரிய மனுவை  உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது உயர்நீதிமன்றம் மூன்று வாரங்களில் முடிவு செய்யும் என்ற நிலையில். பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்தப் பொதுக்குழு நடந்துள்ளதனால் பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாதென்றும் அறிவிக்க வேண்டும். விதிப்படி மட்டுமே பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த பொதுக்குழு விதியை மீறி நடந்துள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் மனுவில் கோரி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது மேற்கண்ட வழக்கில் தன்னுடைய கருத்தையும் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்தார். அதேபோல் அதிமுக தலைமை நிலையம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்று வாரங்களில் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்குள் துணை குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிந்த பிறகு இந்த அதிமுக வழக்கில் நிலை தெரியும்.இப்படி இது ஒரு பக்கம் நடக்க காரியாபட்டியில் பேசிய முன்னால் மாநில அமைச்சரும் பாஜக விலிருந்து. தேமுதிக வந்து பின்னர் அங்கிருந்து அதிமுக வந்த மா.ப. பாண்டியராஜன்.  பாரதிய ஜனதா கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும், ஓ.பன்னீர் செல்வம்    சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்குமென நம்புகிறேன் எனப் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் பங்கேற்று பேசிய போது அதிமுகவின் ஒற்றைத் தலைமையின் பலம் டெல்லி வரை தெரிந்துள்ளது. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் அவர்கள் இருவரையும் சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்குமென நம்புகிறேன். பாதிய ஜனதா கட்சியின் எங்களின் தோழமைக் கட்சி. அவர்கள் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. அதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த போது தனித்து நின்று 136 இடங்களை வென்று ஆட்சி அமைத்தார்களோ,


அதேபோல எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென செயல்பட்டு வருகிறோம். என அவர் பேசுகையில் கூட்டத்தில் இருந்து வந்த குரல். அம்மா(ஜெயலலிதா) இருந்திருந்தால் இவர்  இவ்வாறு பேசமுடியுமா எல்லாம் விதி என்பது பலரது காதுகளில் கேட்டிருந்த நிலையில் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அதிமுகவை அழிக்கும் என அடிமட்ட தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனின் பேட்டி, அங்கிருந்த அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் 



ஆளுங்கட்சிக்கு அடுத்த இடம் எங்களுக்குத்தான் என பாரதிய ஜனதாவுக்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் தெரிவித்தார் 

மதுரை முனிச்சாலையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘அதிமுக என்பது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆளுங்கட்சியான திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் இரண்டாமிடம் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும். இதனை யார் புரிய வேண்டுமோ அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றார். இது இப்படி இருக்க பலர் பாஜகவிற்கு வருவதாக ஒரு பிம்பத்தை கட்டமைப்பு செய்கிற நிலையில் தங்கள் சொந்த பாதிப்புகள் உள்ள பலரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள அங்கு இணைவது வாடிக்கையாகிவிட்டது.                           மற்றும் ஒரு கட்சி அரசியல் ரீதியாக அது சரி என்று பார்த்தாலும் சரியான நபர்கள் இதுவரை அங்கு சேரவில்லை என்பதே நாம் உற்றுநோக்குவதாகும். சமீபத்தில்               ஸ்ரீ தேவியின் கணவர்  போனிகபூருக்கு  தமிழ்நாட்டில் சகலை சஞ்சய் ராமசாமி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததை அண்ணாமலையைத் தவிர வேற யாரும் வரவேற்கவில்லை காரணம் காலம்சென்ற ஜி.கே.மூப்பனார் காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் தோற்கடிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தனிக்கட்சியாக அதை விட்டு விலகி தனியாக வருவது ஏன் என்பதை அறிந்த அரசியல் வாதிகள் இப்போதில்லை அதே வழியில் தற்போது ஜி.கே.வாசனும் தொடர்வதால் அவர் தமாகா ஆரம்பிக்கும் போது அதில் மெம்பர்ஷிப் கார்டு  பிரிமியத்துல போச்சல்லவா.  அண்ணாமலை சைக்கிள் காரணமாக அப்போது அதில்  மாவட்டத்தலைவராக இருந்த ஒருத்தர் இப்போ அதிமுகவில் முகவரி இல்லாமல் இருக்கிறவர் ஒரு கார்டுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி நேரடியாக ஜி.கருப்பையயா மூப்பனார் கையில் கொடுக்க வைத்தவர்.

அன்றைக்கு அட்ராசிட்டி காட்டிய ஜெ‌ ஜெயலலிதாவை எதிர்த்துக் களமிறங்கிய திமுக கூட்டணியில்   ரஜினி + மூப்பனாருக்கு கிடைத்த மரியாதை அது.

இன்னைக்கு அதிமுக முடங்கி பாஜக பயில்வான் போல காட்சியளிக்க வேண்டிய கட்டாயம் உண்மை வேறு விதமாக காணலாம். அது வாக்கு வங்கியாக தமிழகத்தில்‌‌ மாறாது என்பதே மக்கள் பலம் கொண்ட உண்மை பயில்வான் திமுக தான் தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் பார்க்கறதால அண்ணாமலைக்கு இப்போது சின்னதா ஒரு வால்யூ அவ்வளவுதான்.

ஜி.கே.மூப்பனார் எப்படி அடுத்த  தேர்தலில் காணாமல் போனாரோ அதே நிலை தான் அது போலவே இதுவும். 

அதைத் தெரிஞ்சுக்காம நாங்க நாக் அவுட் ஆவுற கட்சிக்கு ஏன்டா வந்தோம்னு நைட் ஆனா நோவுறது அவர்களுக்குத்தான் தெரியும்.. ஆனால் இன்று வயிற்று வலி தீரும் நிலை இவர்கள் வருகைப் பதிவாகியுள்ளது  அது மட்டுமில்லாம அந்த போனிகபூர் சகலை எப்பவுமே யாருக்குமே என்றுமே  விசுவாசமாக  இருந்ததில்லை அதிமுகவில் உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி போல  நடிகை ஸ்ரீதேவிக்காக ஜி.கே.மூப்பனார்  இந்த நபருக்கு  சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுத்து ஜெயிக்க வைத்வர் பத்து மாதத்தில் பால் மாறி அப்புறம் ஜெ. ஜெயலலிதாவின் முன்  இணைந்ததே அப்போது நிலை  அப்படிப்பட்ட ஆட்கள் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?  இது இப்படி என்றால் சமூகத்தில் ஊழல் மலிந்து ஊழல் புரையோடி காணப்படுகின்றன  ஒரு மனிதனை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவனது ஆசையைத் துாண்ட வேண்டும்' என்ற வசனம், நட்டி (எ) நடராஜ், கதாநாயகனாக நடித்த சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும். தேர்தலில் வென்று ஆட்சியில் அமர, இந்த சதுரங்க வேட்டை உத்தியைத் தான், அரசியல் கட்சிகள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றன. ஓட்டளிக்கும் மக்களின் ஆசையைத் துாண்ட அரசியல் கட்சிகள் பிரயோகிக்கும் ஆயுதம், தேர்தல் வாக்குறுதி.


அரசியல் கட்சிகள் இப்படி, மக்களை மொத்தமாக ஏமாற்றி, குளிர் காய்ந்து கொண்டிருக்க, சில தனி நபர்கள் தங்கள் வாய்ஜாலத்தால், அப்பாவி மக்களின் ஆசையைத் துாண்டி, ஏமாற்றி கோடிகளைச் சுருட்டி வருகின்றனர். 'டப்ளிங் தி மணி, தங்க காசு, ரைஸ் புல்லிங்' போன்றவை அவற்றில் சில. அந்த வரிசையில் தற்போது, கவர்னர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ., பதவிகளும் இணைந்துள்ளன.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்தக் கட்சி தான், தன் கட்சியினரை கவர்னராகவும், ராஜ்யசபா எம்.பி.,க்களாகவும் நியமிக்கும். காசு கொடுத்து அந்தப் பதவிகளைப் பெற, அவை ஒன்றும் கட்சியின் மாவட்டச் செயலர்கள் பதவியோ, வட்ட செயலர்கள் பதவியோ அல்ல.   மஹாராஷ்டிரா மாநிலத்தில்  கமலாகர் பிரேம்குமார் பண்டகர், கர்நாடகாவின் பெல்காமைச் சேர்ந்த ரவீந்திர விதால் நாயக், புதுடில்லியில் வசிக்கும் மகேந்திர பால் அரோரா, அபிஷேக் போரா, முகமது அய்ஜாஸ் கான் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து, கவர்னர் பதவி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ., பதவி வாங்கித் தருவதாக, பல்வேறு முட்டாள் நபர்களின் ஆசையைத் துாண்டி, 100 கோடி ரூபாய் வரை வாரிச் சுருட்டியுள்ளனர்.

'கேப்பையில் நெய் ஒழுகுகிறதென்று ஒருவன் சொன்னால், கேட்பவனுக்கு எங்கே போயிற்று மதி' என்பர். அது போலவே எல்லா வகையான போலியான நபர்கள் இப்போது சதுரங்க வேட்டை நடத்தக் காரணமாக இருப்பதன் அடிப்படை ஊழல் தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்கள் பாதுக

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை