முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் 541 கிராம் தங்கம் மற்றும் ரூ.12.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 541 கிராம் தங்கம் மற்றும் ரூ.12.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் 25.11.2022 அன்று துபாயிலிருந்து வந்த இகே-542 விமானத்தில் சென்னைக்கு வந்த ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து 66 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. அவரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குடலுக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 5 தங்க கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 24 காரட் தங்கமான இவை அனைத்தின் மொத்த எடையும் 425 கிராம் அளவுக்கு இருந்தது. இவற்றின் மதிப்பு 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும். இந்த தங்கத்தை சுங்கச்சட்டம் 1962-ன்கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 21.11.2022 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் IX-688 விமானத்தின் மூலம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின்போது அந்த நபரின் உடைமைகள் மற்றும் குடல் பகுதியில் இருந்து 12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி இருப்பது க...

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பிரதமர் கருத்து

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது: பிரதமர் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ஃபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பதற்கு பாராட்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 7 மாதங்களுக்குள் மொபைல் ஃபோன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது.  இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்த 2.2 பில்லியன் டாலரை அளவை விட  இருமடங்குக்கும் அதிகம். மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது”.

இந்திய உணவுக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் முன்னோடியாக உள்ளது

இந்திய உணவுக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து தற்போதுவரை 12.56 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை கையாண்டுள்ளது உணவுக் கொள்கையின் நோக்கங்களை முழுமையாக அடைய 1964-ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு தொடக்கத்திலிருந்தே நெருக்கடி மேலாண்மை தொடர்பான உணவுப் பாதுகாப்பில் வெற்றி பெற்று, நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. தூத்துக்குடி மண்டல அலுவலகம் 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 மாவட்டங்களில் இது அலுவலகங்களை கொண்டுள்ளது. தமிழ்நாடு அரிசி மற்றும் கோதுமை  கொள்முதலில் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. அரிசி மற்றும் கோதுமை பற்றாக்குறையை எதிர்கொள்ள பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக தமிழகத்திற்கு அவை பெறப்படுகின்றன. இந்நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டின் தொடக்கம் முதல் இந்த நிதியாண்டின் தற்போதைய காலகட்டம் வரை தூத்துக்குடி மண்டல இந்திய உணவுக் கழகம் 12 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை கையாண்டுள்ளது. பிரதமரின் ...

செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானதென மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் பொறுப்பான ஊடக நிறுவனங்கள், பொது நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கொள்கையாக வைத்திருக்க வேண்டும்: திரு அனுராக் தாக்கூர் உண்மையான தகவல்களை வழங்குவது ஊடகங்களின் முதன்மைப் பொறுப்பு என்றும், தகவல்கள் பொது களத்தில் வைக்கப்படுவதற்கு முன்பு உண்மைகளை சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு யூனியன் பொதுச் சபை 2022-ன் தொடக்க விழாவில் இன்று பங்கேற்றுப் பேசிய அமைச்சர், மக்களுக்கு தகவல் சொல்லப்படுவதன் வேகம் முக்கியமானது என்பதும் துல்லியம் அதைவிட முக்கியமானது என்பதும் செய்தியாளர்களின் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்றார். சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரவலாகியுள்ள நிலையில் அவற்றில் போலி செய்திகளும் பெருகிவிட்டன என்று அமைச்சர் மேலும் கூறினார். இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை தடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப...

நாகாலாந்தின் நியுலாந்தில் இந்திய கப்பற்படை மருத்துவ முகாம்

நாகாலாந்தின் நியுலாந்தில் இந்திய கப்பற்படை மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது நாகாலாந்து மாநிலம் திமாப்பூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொலைதூர கிராமமான நியுலாந்தில் இந்திய  கப்பற்படை 2 நாள்  பன்னோக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை கப்பற்படையின்  மருத்துவ  சேவைகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ரவீந்திரஜித் சிங், நியுலாந்து மாவட்ட ஆணையர் திருமதி சாரா எஸ் ஜமீர் ஆகியோர் இன்று (29.11.2022) தொடங்கிவைத்தனர். இந்திய கப்பற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள், கண் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் போன்றோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.  இவர்களால், குறித்துக் கொடுக்கப்பட்ட மருந்துகள், நோயாளிகளுக்கு விலையின்றி வழங்கப்பட்டன.

இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழா என ஜி.கே.வாசன் தகவல்

ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் காசி தமிழ் சங்கமம்: ஜி. கே. வாசன் தகவல் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜி. கே. வாசன் இன்று கலந்து கொண்டார். அப்போது சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை என்றும், இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது என்றும், இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.காசி தமிழ...

குடியரசுத்தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர்

குடியரசுத்தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர் பங்களாதேஷ், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், லாட்வியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், வழங்கிய நியமனப் பத்திரங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம்: திரு முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான் -  பங்களாதேஷ் மக்கள் குடியரசு தூதர் திரு இப்ராஹிம் ஷாஹீப் - மாலத்தீவுகள் குடியரசு தூதர் டாக்டர் அப்துல் நாசர் ஜமால் உசேன் முகமது அல்ஷாலி – ஐக்கிய அரபு அமீரகத் தூதர் திரு ஜூரிஸ் போன்  - லாட்வியா குடியரசு தூதர் திரு சுசூகி ஹிரோஷி – ஜப்பான் தூதர்