குடியரசுத்தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர்
பங்களாதேஷ், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், லாட்வியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், வழங்கிய நியமனப் பத்திரங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம்:
திரு முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான் - பங்களாதேஷ் மக்கள் குடியரசு தூதர்
திரு இப்ராஹிம் ஷாஹீப் - மாலத்தீவுகள் குடியரசு தூதர்
டாக்டர் அப்துல் நாசர் ஜமால் உசேன் முகமது அல்ஷாலி – ஐக்கிய அரபு அமீரகத் தூதர்
திரு ஜூரிஸ் போன் - லாட்வியா குடியரசு தூதர்
திரு சுசூகி ஹிரோஷி – ஜப்பான் தூதர்
கருத்துகள்