முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழா என ஜி.கே.வாசன் தகவல்

ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் காசி தமிழ் சங்கமம்: ஜி. கே. வாசன் தகவல்

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜி. கே. வாசன் இன்று கலந்து கொண்டார்.

அப்போது சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை என்றும், இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது என்றும், இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5வது தொகுப்பு தமிழ் பிரதிநிதிகள் வாரணாசி சென்றனர்


ஒருமாத காலம் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5-வது தொகுப்பு தமிழ் பிரதிநிதிகள் வாரணாசி சென்றனர்.  216 பேரைக் கொண்ட இந்தக் குழுவினருக்கு வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடுக்கை அடித்து மலர்கள் தூவி அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பில் விருந்தினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தக் குழுவில் தமிழ்நாடு தவிர புதுச்சேரி மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். பாபா விஸ்வநாதர் ஆலயத்தை அடைந்த போது, இவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், சந்தைகளுக்கும் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் பின்னர், மாலையில் பெரிய படகு ஒன்றில் துறவி ரவிதாஸ், படித்துறைக்கு  சென்ற  தூதுக்குழுவினர் மற்ற படித்துறைகளுக்கும் சென்று கங்கா ஆர்த்தியை கண்டு களித்தனர். இதையடுத்து இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை,காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது: காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் கருத்து


காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்கு  ஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5-வது தலைமுறையாக வாழுகின்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதன் முறையாக காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமத்தையொட்டி,  பத்திரிகை தகவல் அலுவகத்திற்கு சிறப்பு பேட்டியளித்த வெங்கட்ரமண கனபாடிகள், பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முதன் முறையாக  காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி,  அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன்  இருக்கிறார்கள்.  கங்கையில், புனித நீராடவும், கடவுள்களை தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்கனவே வந்தவர்களைவிட இப்போது  கூடுதலாக வருகிறார்கள்.  ஒவ்வொரு நாளும்  அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

காசிநாதர் ஆலயம் மிகக் குறுகலாக சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, விஸ்வநாதர் ஆலயத்தை விரிவாக்க உறுதி மேற்கொண்டார். இதனால், கடல் போல் பரந்த பிரகாரமாக விரிவுப்படுத்தியிருக்கிறார். இப்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்யமுடியும். முன்பெல்லாம் அன்னதானம் இல்லை, கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்யப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

உலகத்திலேயே கிடைக்காத மணிகர்னிகா தீர்த்தம்,  விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலேயே உள்ளது.  இந்த தீர்த்தத்தை  கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்தார்.

கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு  கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கோவில்களில் பாராயணங்களும், கச்சேரிகளும் நடப்பது போல் காசியிலும் நடத்துவதற்கு வசதியாக இந்தக் கலையரங்கு அமைந்துள்ளது என்பதை அவர்  பெருமையாகக் குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...