முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிரதமர் தொடங்கி வைக்கும் உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்

 உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்பம்       ஜனவரி 28 அன்று நண்பகல் 12 மணிக்கு உச்ச நீதிமன்ற அரங்கில் உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள் , டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளு...

மோசடியில் ஹை ரிச் ஆன்லைன் ஷாப்பி பிரைவேட் லிமிடெட் உரிமையாளர்கள்

மோசடியில் ஈடுபட்ட ஹை ரிச் ஆன்லைன் ஷாப்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான கே டி பிரதாபன் மற்றும் ஸ்ரீனா பிரதாபன் ஆகியோரின் 55 வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளதாகத் தகவல். 55 வங்கிக் கணக்குகளில் 212 கோடி ரூபாய் உள்ளதென்று கொச்சின் மண்டலத்தின்  அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் பிரசாந்த் குமார் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்கண்ட  தம்பதியரின் பணமோசடி குறித்து விசாரணை நடத்திய மத்திய ஏஜென்சி, செவ்வாய் கிழமை  மற்றும் புதன் கிழமைகளில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள தம்பதிகளின் வீடுகள் மற்றும் ஹைரிச் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் வங்கிக் கணக்குகளின் விவரங்களைக் கண்டுபிடித்தனர். மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் சில்லறை விற்பனைக் கடை என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலித்து பிரமிட் திட்டங்களை இயக்கியதாக இயக்குநர் பிரதாபன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து டெபாசிட்களை பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சூர் காவல்துறை மேற்கண்ட தம்பதியினர் மற்றும் ஹைரிச் இயக்க...

அயோத்தி புறவழிச்சாலை திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல்

அயோத்தி புறவழிச்சாலை திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் தூண்டுகிறது கடந்த இரண்டு ஆண்டுகளில், 131 க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களின் விரிவான பகுதி அடிப்படையிலான சமூக-பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 64 இணைப்பு திட்டமிடல் குழு (என்.பி.ஜி) கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 52-வது என்.பி.ஜி கூட்டத்தின் போது அயோத்தி புறவழிச்சாலை திட்டம் ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக மதிப்பீடு செய்யப்பட்டது. 67.57 கி.மீ லக்னோ, பஸ்தி மற்றும் கோண்டா போன்ற முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிரீன்ஃபீல்ட் திட்டமாக இத்திட்டம்  அமையும். இந்தத் திட்டம், இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மற்றும் புனிதத் தலங்கள் உள்ளிட்ட பொருளாதார, சமூக மற்றும் சரக்கு போக்குவரத்து முனையங்களுக்கான இணைப்பை மேம்படுத்த உதவும். அயோத்தி இரண்டு பொருளாதார மையங்களுக்கு (லக்னோ மற்றும் கோரக்பூர்) இடையில் அமைந்துள்ளது மற்றும் தோல், பொறியியல் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு போன்ற முக்கிய பொருட்கள் நகரத்தின் வழியா...

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  தமிழ்நாடு அரசு உத்தரவு.  திருப்பத்தூர், திருவண்ணாமலை,சேலம், தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு .திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியனும், சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோரும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக இதுவரை இருந்துவந்த முருகேஷ்  வேளாண்மைத் துறை இயக்குநராகவும்,வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த  குமரவேல் பாண்டியன் தோட்டக்கலைத் துறை இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராகவும்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி ஐஏஎஸ் மாற்றுத் திறனாளிகள் துறை இயக்குனராகவும், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகியோர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்  தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே  உள...

2024 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தின விழா நிகழ்வுகள்

2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை எனதருமை குடிமக்களே, வணக்கம்! 75-வது குடியரசு தின விழா நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதும் எவ்வளவு தூரம் நாம் பயணித்திருக்கிறோம் என்பதை நான் திரும்பிப் பார்க்கும்போது எனது மனம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது. குடியரசின் 75-வது ஆண்டு நாட்டின் பயணத்தில் பலவழிகளில் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் நிறைவு செய்தபோது நமது தனித்துவமான பெருமிதம் மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடியது போலவே இந்த விழாவும் குறிப்பிடத்தக்கதாகும். அரசியல் சாசனம் செயல்பாட்டுக்கு வந்ததை நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். இதன் முகப்புரை, “இந்திய மக்களாகிய நாம்” என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. இந்த ஆவணத்தின் மையப்பொருளான ஜனநாயகம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயக முறை என்பது மேற்கத்திய ஜனநாயகக் கோட்பாட்டை விட மிகவும் பழமையானது. இந்தியாவை “ஜனநாயகத்தின் தாய்”...

பாடிய இசைத்தட்டு பாதியில் நின்றது பவதாரிணி இலங்கையில் கொழும்பு நகரில் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி இலங்கையில் கொழும்பு நகரில் காலமானார் -  இசைஞானி இளையராஜாவின் மகள்  பவதாரணி  வசீகரிக்கும் காந்த குரலுக்கு சொந்தமானவர் பாடிய பாஐல்கள்  அனைத்துமே வெற்றி பெற்ற பாடல்கள் தான். தற்போது ராமர் கோவில்  விழா முடித்து  இலங்கையில் நடக்கவிருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்தார் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததால் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது   யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியும், கங்கை அமரனது பெறாத வளர்ப்பு மகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.பாடிய இசைத்தட்டு பாதியில் நின்றது போல் ஒரு பேரமைதி. பெருந்துயர் இசைஞானி குடும்பத்தில் காரணம் மருத்துவச் சிகிச்சை முறை மாறிய ஆபத்து அது .. இது சங்கீதத் திருநாளோ என்று பாடியவர் இந்த நாளை வெறும் நாளாக்கிவிட்டுப் போய்விட்டார். அய்யோ அய்யய்யோ ..பச்சை இலையும்  பழுத்த இலையும் கிளை மறைய நிலை அழிய காற்றில் ஒரு களிநடனம்...பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்தும் அந்த நயநெளிவுகளில் நான் ஒரு மரப்பாச்சியானேன் பச்சையும் இல்லை பழுப்பும் இல்லை ...

ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழா

 அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஜனவரி 22 அன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார் பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர் திலாவை பிரதமர் பார்வையிட்டார் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மதப் பிரதிநிதிகள் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டனர் 2024 ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார். வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார். ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலய கட்டுமானத்தில் தொடர்புடைய தொழ...