மோசடியில் ஈடுபட்ட ஹை ரிச் ஆன்லைன் ஷாப்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான கே டி பிரதாபன் மற்றும் ஸ்ரீனா பிரதாபன் ஆகியோரின் 55 வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளதாகத் தகவல்.
55 வங்கிக் கணக்குகளில் 212 கோடி ரூபாய் உள்ளதென்று கொச்சின் மண்டலத்தின் அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் பிரசாந்த் குமார் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்கண்ட
தம்பதியரின் பணமோசடி குறித்து விசாரணை நடத்திய மத்திய ஏஜென்சி, செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமைகளில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள தம்பதிகளின் வீடுகள் மற்றும் ஹைரிச் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் வங்கிக் கணக்குகளின் விவரங்களைக் கண்டுபிடித்தனர். மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் சில்லறை விற்பனைக் கடை என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலித்து பிரமிட் திட்டங்களை இயக்கியதாக இயக்குநர் பிரதாபன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து டெபாசிட்களை பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திருச்சூர் காவல்துறை மேற்கண்ட தம்பதியினர் மற்றும் ஹைரிச் இயக்குநர்கள் மீது கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியர், 1,630 கோடி ரூபாய் திரட்டினர்.ஹை ரிச் மற்றும் அதன் உரிமையாளர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை, பட்ஸ் சட்டத்தின் கீழ், தற்காலிகமாக பறிமுதல் செய்ய, திருச்சூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
40 சதவீதம் லாபம் கலந்து வருமானம் தருவதாக உறுதியளித்துத் திரட்டப்பட்ட பணம் நான்கு தனியார் வங்கிகளில் 20 கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவலை காவல் துறையினர் தெரிவித்தனர். ஹை ரிச் சுமார் 70 ஷெல் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகவும், அவற்றில் 14 திருச்சூரில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் 23 ஆம் தேதி, செவ்வாய்கிழமை, ED அதிகாரிகள் குழு பிரதாபன்களின் வீடுகளை சோதனையிட சேர்பூவை அடைந்தது. ஆனால் அவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தம்பதியினர் ஓட்டுநர் ஓட்டிய காரில் வீட்டை விட்டு வெளியேறினர்.
ED குழு காரை துரத்த முயன்றது, ஆனால் கைவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.
பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பிரதாபன் தரப்பு வழக்கு தொடர்ந்ததில் ஜனவரி மாதம் 25 வியாழன் அன்று விசாரணைக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் நீதிபதி அறிக்கை கேட்டு விசாரணையை ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்கு மாற்றியதாக ED இன் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஜே.சந்தோஷ் தெரிவித்தார்.
நவம்பர் 2023 இல், கேரள ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு திருச்சூரில் உள்ள ஆராட்டுப்புழாவில் உள்ள ஹைரிச் ஆன்லைன் ஷிப் அலுவலகத்தில் சோதனை நடத்தியது மற்றும் நிறுவனம் ரூ. 703 கோடி வர்த்தகத்தை அடக்கியது மற்றும் அதன் வரி பொறுப்பு ரூ. 126.54 கோடி என்று கணக்கிடப்பட்டது. எர்ணாகுளம் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (பொருளாதார அலுவலகம்) நீதிமன்றத்தால் நீதிமன்றக் இகாவலில் வைக்கப்பட்டிருந்த பிரதாபனையும் உளவுப் பிரிவு கைது செய்தது.
கருத்துகள்