இந்தியாவின் பதினெட்டாவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும் முன்பாகவே சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அரசியல் சூடு பிடித்துள்ளது. தொகுதிகளின் மறுசீரமைப்பில் சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி மாற்றத்திற்குள்ளானதற்கு முன் திருமயம், திருப்புத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிருந்த நிலையில் திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மற்றவை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்ததில், இதுவரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்கள் விபரம் வருமாறு:- 1967 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை காலம்சென்ற தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பெ.தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் 1984 ஆம் ஆண்டு ம...
RNI:TNTAM/2013/50347