நாம் கடலூர், பாண்டிச்சேரி எனப் புறப்படும் போது நம் நினைவில் வருவது
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை மருதூர் அய்யா வடலூர்.இராமலிங்க அடிகள் வள்ளலார் தான், கடந்த வாரம் கூட நண்பர்களுடன் தரிசித்த அனுபவம்
பறந்து விரிந்து ஆனால் அமைதியாகத் திகழும், வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் அமைப்பதில் நமக்கு உடன்பாடில்லை..
கூடாரத்தில் ஒட்டகத்தை நுழைய விட்ட கதையாகவே மாறிவிடும்.
சத்திய ஞான சபையின் நீண்ட கால முகம் கண்டிப்பாக சிதைக்கப்படும். அதன் செயலாளர் அண்ணன் திரு டாக்டர் செல்வராஜ் அவர்கள் கருத்தும் இதுவாகவே இருக்குமென நம்புகிறேன், பாமக நடத்திய போராட்டம் வரவேற்புக்கு உரியதே ஆகும். சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரிச் சுரங்கமிருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை. கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சர்வதேச மையத்தை அமைக்கலாம் என்றும், அதுவரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கூறி சத்திய ஞானசபை பெருவெளியில் மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
பெருவெளியைத் தவிர்த்து, சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாமென்றும் அப்பகுதி மக்கள் மாற்று யோசனையைக் கூறியுள்ளனர். அங்குள்ள ஒளிக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கிக் காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கம்.
ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது, முதலமைச்சர் கானொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார், இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும், அப்பகுதி மக்களும் ஒளிக்கோவிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போதய தென்னார்காடு மாவட்டம் தற்போது கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பார்வதிபுரத்தில் 1887 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாகப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரைப் பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாகவே பயன்படுத்தினார்.
, இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். இப்படி இருக்கையில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது சரியல்ல" என பாட்டாளி மக்கள் கட்சியினரும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் ரூபாய்.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. வள்ளலார் மையம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடலூர் நான்கு முனை சந்திப்பில் திரண்ட பாமகவினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஜெகன், சன் முத்துகிருஷ்ணன் கார்த்திகேயன், செல்வமகேஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல, மாலையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் திருமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "வள்ளலாரின் சன்மார்க்கத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். வள்ளலார் வழி அன்பர்கள் தைப்பூசத்துக்குத் திரளும் இப்பெருவெளியை, இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால், அவர்கள் வந்து செல்லும் போது கடும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்